ரோஜா செடி அதிகம் பூக்க
பொதுவாக ரோஜா பூவினை எல்லோரும் தலையில் வைப்பதற்கு அதிகமாக விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் ரோஜாவின் அழகு ஆனது நாம் தலையில் வைப்பதனால் வாடிவிடும் என்ற காரணத்தினால் அதனை செடியில் இருப்பதை மட்டுமே கண்டு ஆசை கொள்வார்கள். அதேபோல் ரோஜா செடி முழுவது பூக்கள் பூத்து குலுங்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அதன் படி பார்த்தால் சிலரது வீட்டில் ரோஜா செடி எப்படி வாங்கி வைத்தார்களோ அப்படியே எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் காணப்படும். அதனால் இன்று பூக்காத ரோஜா செடியிலும் பூக்கள் அதுவும் 10 நாளில் எப்படி பூக்க வைப்பது என்பதற்கான டிப்சினை தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Plant and Grow Roses in Tamil:
ரோஜா செடியினை நாம் எப்போதும் ஓரளவு வெயில் இருக்கும் இடத்தில் நட வேண்டும். அதேபோல் மண் கலவை நல்லதாக இருக்கும் இடத்தில் இந்த செடியினை நடவு செய்வது என்பது நல்லது.
அதன் பிறகு வாரம் 3 முறை என சாதாரணமாக தண்ணீர் ஊற்றினால் போதும் செடி நன்றாக இலைகள் வைக்க ஆரம்பிக்கும்.
மாட்டுச்சாணம்- 1 கைப்பிடி அளவு
முதலில் மாட்டுச்சாணத்தை எடுத்துக்கொண்டு அதனை ஒரு வாலியில் போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து கலந்து 15 நாட்கள் வரை அப்படியே மூடி வைத்து விடுங்கள்.
15 நாட்கள் கழித்த பிறகு தயார் செய்து வைத்துள்ள மாட்டுச்சாணம் கரைசலுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து அதனை பூக்காத ரோஜா செடியின் இலைகளில் தெளித்து விடுங்கள்.
இவ்வாறு தெளிப்பதன் மூலம் ரோஜா செடிக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதனால் ரோஜா செடியில் அதிகமாக பூக்கும் மற்றும் பூச்சிகளின் தாக்கமும் இருக்காது.
மண்ணே இல்லாமல், 5 நாளில் கொத்தமல்லியை உங்க வீட்டிலேயே வளர்க்கலாம் ..
மல்லிகைப்பூ செடியில் 10 நாட்களில் பூக்கள் பூத்து குலுங்க இதை ட்ரை பண்ணுங்க
கற்றாழை செடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர என்ன செய்வது தெரியுமா
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |