ரோஜா செடியில் அதிக பூக்கள் பூப்பதற்கு எப்சம் சால்ட் மட்டும் போதும்..

Advertisement

ரோஜா செடியில் அதிக பூக்கள் பூக்க 

பலருக்கும் வீட்டில் பூச்செடிகள் வளர்ப்பது பிடித்தமான ஒன்றாகும். ஏனென்றால் வீட்டில் பூச்செடிகள் இருந்தாலே வீடே அழகாக இருக்கும். இதனால் பூச்செடிகளை வாங்கி வருவார்கள். அதுவும் நர்சரி கார்டனில் பூக்கள் பூத்து குலுங்கும். அதை வீட்டிற்கு வாங்கி வந்த 10 நாளிலே வாடி விடும். இதனால் மிகவும் கவலை அடைவீர்கள். அதனால் தான் இந்த பதிவில் ரோஜா செடியில் அதிக பூக்கள் பூப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ரோஜா செடி வளர்வதற்கு என்ன செய்ய வேண்டும்:

ரோஜா செடிகள் வளருவதற்கு முக்கியமாக இருப்பது மண் கலவை தான். மண் கலவை தேர்வு செய்யும் வகையில் தான் ரோஜா செடியில் இருந்து அதிக பூக்கள் பூப்பதற்கு உதவி செய்யும். அதனால் மண் கலவை தேர்வு எப்படி செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.

ரோஜா செடி வளருவதற்கு உகந்த மண்ணாக செம்மண் இருக்கிறது. இதோடு மண் புழு உரம் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த மண்ணில் ரோஜா செடிகளை வளர்க்க வேண்டும். இதன் மூலம் ரோஜா செடியில் அதிக பூப்பதற்கு உதவி செய்கிறது.

ரோஜா செடியில் வளர்ப்பதில் செய்யும் தவறுகள்:

ரோஜா செடியில் வளர்ப்பதில் செய்யும் தவறுகள்

நர்சரியிலிருந்து வாங்கி வந்த உடனே ரோஜா செடியை நட கூடாது, ஏனென்றால் நர்சரியில் ரோஜா செடிகளை கால நிலையில் வைத்திருப்பார்கள். கானை வந்த உடனே நட்டால் இறந்து விடும்.

வீட்டிற்கு வாங்கி வந்ததும் மூன்று நாட்கள் நிழலிலே வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு மண் தொட்டியில் ரோஜா செடிகளை வளர்க்க வேண்டும்.

ரோஜா செடியை அதிக வெயில் உள்ள இடத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும். இந்த செடிக்கு காலை வெயில் மற்றும் மாலை வெயில் பட்டாலே போதுமானது. இது மாதிரி உள்ள இடமாக பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.

மாதுளை செடியிலேயே காய்கள் காய்க்க வாரம் 1 முறை இதை ட்ரை பண்ணி பாருங்க 

பூக்கள் அதிகம் பூக்க செய்ய வேண்டியது: 

ரோஜா செடியில் 15 நாட்களுக்கு ஒரு முறை எப்சம் சால்ட்டை 1 ஸ்பூன் எடுத்து ரோஜா செடியின் வேர் பகுதியில் சேர்த்து கிளறி விட வேண்டும். இது போல செய்வதினால் பூக்கள் அதிகம் பூப்பதற்கு உதவி செய்கிறது.

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement