ரோஜா செடிகள் அதிக பூக்கள் பூக்க காபி தூள் மட்டும் போதும்..

Advertisement

ரோஜா செடி வளர்க்கும் முறை

பலருக்கும் வீட்டில் பூச்செடிகள் வளர்ப்பது பிடித்தமான விஷயமாக இருக்கிறது. அதிலும் பெரும்பாலான வீட்டில் ரோஜா செடிகள் இருக்கும். பக்கத்து வீட்டில் இருப்பதை பார்த்து விட்டு நமது வீட்டிலும் வளர்க்க வேண்டும் என்ற ஆசை வந்து விடும். இதனால் கடைக்கு சென்று ரோஜா செடியை வாங்கி வருவார்கள். அப்படி வாங்கி வந்து வளர்க்கும் போது சில பேர் வைத்த உடனே அதில் மொட்டுகள் வைத்து பூ பூக்க ஆரம்பித்து விடும். சில பேர் வைத்த செடிகளில் மொட்டுகளே வைக்காது. இதனால் கவலை அடைவார்கள். அதனால் இந்த பதிவில் ரோஜா செடியில் அதிக மொட்டுகள் வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

ரோஜா செடிகள் வளர்ப்பது எப்படி.?

மண் கலவை:

ரோஜா செடி வளர்ப்பதற்கு மண் கலவை முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ரோஜா செடி வளர உகந்த மண்ணாக செம்மண் இருக்கிறது. இந்த செம்மண்ணுடன் மண்புழு உரமும் சேர்த்தால் பூக்கள் நிறைய பூப்பதற்கு உதவு செய்கிறது.

ரோஜா செடியில் மண் ஆனது எப்போதும் ஈரப்பதமாக இருக்க வேண்டும். அ, ஏனென்றால் மண் இறுக்கமாக இருந்தால் ஆக்சிஜன் கிடைக்காமல் அது வாட துவங்கும். மண்ணில் இருந்து கிடைக்கக்கூடிய ஆக்சிஜன் மற்றும் ஈரப்பதம் கொடுக்கக்கூடிய உரங்கள் இவை அனைத்துமே ஒரு ரோஜா செடியை நன்கு பூக்க செய்கிறது.

3 சென்டில் 7 நாட்களில் வீட்டிலேயே கீரையை செழிப்பாக வளர வைக்க என்ன செய்யனும் தெரியுமா 

உரம்:

ரோஜா செடி வளர்க்கும் முறை

ரோஜா செடிக்கு தேவையான சத்துக்கள் முட்டையின் ஓட்டிலும், தேயிலை இருக்கிறது.

அது மட்டும் அல்லாமல் காய்கறி மற்றும் பழக் கழிவுகளும் பயன்படுத்தப்படுவது உண்டு. அந்த வகையில் இந்த ஒரு பொருளும் ரோஜா செடிகளுக்கு தேவையான சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளது.

காபி தூளில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், அயன், மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது.

இரண்டு ரூபாய் காபி தூள் பாக்கெட் வாங்கி கொள்ளுங்கள். இதனை  ஒரு லிட்டர் அளவிற்கு அரிசி கழுவிய தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் பத்து லிட்டர் அளவிற்கு சாதாரண தண்ணீரில் சேர்க்க வேண்டும். இந்த தண்ணீரை தான் நீங்கள் ரோஜா செடிகளுக்கு ஸ்ப்ரே செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் செடி முழுவதும் தண்ணீர் எப்பொழுதும் ஊற்றுவது போல ஊற்றி விட வேண்டும்.

இந்த உரத்தை தினமும் கொடுக்க வேண்டியதில்லை. மாதத்தில் ஒரு முறை கொடுத்தால் போதுமானது. இது போல் நீங்கள் கொடுத்தது வந்தால் ரோஜா செடியில் மொட்டுகள் அதிகம் வைத்து பூக்கள் அதிக பூப்பதற்கு உதவி செய்கிறது.

தண்ணீர் இருந்தால் போதும்.. வீட்டில் வெந்தய கீரை வளர்க்கலாம்…மண் தேவையே இல்ல ..

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement