Rose Growing Tips in Tamil
எந்த ஒரு செயலையும் நாம் தெரிந்து கொண்டு செய்யும் போது அதில் அதிகமாக எந்த விதமான பிரச்சனையும் வராது. ஏனென்றால் அதனை எவ்வாறு செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்ற முன் அனுபவம் இருக்கும். இதே போல தான் நம்முடைய வீடுகளில் சிறிய பூச்செடி அல்லது மரங்களை வளர்ப்பதிலும் முன் அனுபவம் இருக்க வேண்டும். அந்த வகையில் எந்த விதமான அனுபவம் இல்லை என்றாலும் கூட அதற்கான அடிப்படை விஷயங்களை தெரிந்துக்கொண்டு செய்வதன் மூலம் நல்ல முன்னேற்றம் காணலாம். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் சிலரது வீடுகளில் ரோஜா செடியை வளர்த்து வருவார்கள். ஆனால் அது செழிப்பாக வளர்ந்தாலும் கூட மொட்டுக்கள் மற்றும் பூக்கள் என்பது அதிகமாக இருக்காது. அதனால் இன்று வீட்டில் வளர்க்கும் ரோஜா செடியை மொட்டுக்கள் வைத்து நிறைய பூக்கள் பூக்க செய்வது என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ரோஜா செடியில் மொட்டுக்கள் வைத்து அதிக பூக்கள் பூக்க டிப்ஸ்:
பொதுவாக செடி மற்றும் மரத்திற்கு உரங்கள் கொடுக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஏனென்றால் சத்துக்கள் அதிகமாக இருந்தால் மட்டுமே செடி செழிப்பாக வளருவதோடு மட்டும் இல்லாமல் பூச்சிகளின் தாக்கம் இல்லாமலும் இருக்கும்.
அந்த வகையில் கால்சியம் சத்து செடிக்கு மிகவும் அவசியம். ஆகவே செடிக்கு கால்சியம் சத்தினை அளிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருளை எடுத்துக்கொள்ளுங்கள்.
- சாக்பீஸ்- தேவையான அளவு
நீங்கள் எடுத்து வைத்துள்ள சாக்பீஸை நன்றாக பவுடர் போல செய்து கொள்ளுங்கள். பிறகு 1 செடிக்கு 1 ஸ்பூன் என்ற அளவில் செடியின் வேர் பகுதிகளில் கொடுத்து அதன் மேலே மண்ணை கலந்து கொள்ளுங்கள்.
(அல்லது)
ஒருவேளை நீங்கள் இதனை கரைசலாக கொடுக்க வேண்டும் என்றாலும் கொடுக்கலாம். அதாவது 1 லிட்டர் தண்ணீருக்கு 1 ஸ்பூன் சாக்பீஸ் பவுடர் என கலந்து செடியின் வேர்களில் படுமாறு ஊற்றி கொள்ளுங்கள்.
கற்றாழை செடி வேகமாகவும் அதிக சதை வைத்தும் வளர இந்த உரத்தை கொடுங்கள்
Natural Fertilizer for Rose Plant in Tamil:
மேலே சொல்லப்பட்டுள்ள முறையில் நீங்கள் எதை செய்தாலும் 15 நாட்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும். அதேபோல் வழக்கமாக ஊற்றும் தண்ணீரையும் மறுநாள் முதல் ஊற்ற வேண்டும்.
இத்தகைய முறையினை நீங்கள் செய்வதன் மூலம் செடிகளுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைத்து மொட்டுகளும், பூக்களும் அதிகமாக வைக்கும். மேலும் எறும்பு மற்றும் பூச்சிகளின் தாக்கமும் இருக்காது.
கத்தரிக்காய் செடி வருடம் முழுவதும் கொத்து கொத்தாய் காய்க்க இந்த ஒரு பொருள் போதும்
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |