வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

செலவே இல்லாமல் காய்ந்த ரோஜா செடியை வளரவைக்க Easy டிப்ஸ்..!

Updated On: September 27, 2023 9:35 AM
Follow Us:
Rose plant Care Tips in Tamil
---Advertisement---
Advertisement

காய்ந்த செடி மீண்டும் துளிர்க்க | Rose plant Care Tips in Tamil

வணக்கம் நண்பர்களே..! நம்மில் யாராக இருந்தாலும் வீட்டை சுற்றி பூச்செடிகள் மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் பூச்செடிகளை வீட்டை சுற்றி வளர்த்தால் அவ்வளவு அழகாக இருக்கும். இதனால் பலரும் பூச்செடிகளை வாங்கி வந்து வளர்க்கிறார்கள். அப்படி நாம் அனைவரும் வாங்கி வந்து வளர்க்கும் செடி தான் ரோஜா செடி. இது ஒரு சில வீடுகளில் மட்டும் தான் நன்றாக வளரும். சில நேரம் வளரவே வளராது. அதுபோல சில வீடுகளில் வளர்ந்தும் பூக்கள் பூக்காது. இதுபோல நிறைய காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இதுபோல சொல்லி புலம்புபவரா நீங்கள்..? அப்போ இந்த பதிவில் அதற்கான தீர்வு இருக்கிறது. அது என்னவென்று தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

காய்ந்த ரோஜா செடி மீண்டும் துளிர்க்க டிப்ஸ்: 

ரோஜா செடி துளிர் விட

வீட்டில் ரோஜா செடி வளர்க்க பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். அப்படி ஆசைப்பட்டு வாங்கி வந்து வளர்க்கும் ரோஜா செடி பட்டுபோய்விட்டால் அது கொஞ்சம் வருத்தத்தை அளிக்கும்.

ஆனால் இதற்கும் தீர்வு இருக்கிறது. காய்ந்த ரோஜா செடியில் துளிர் வர இந்த கரைசலை ஊற்றுங்கள் போதும்.

அதற்கு முன் ரோஜா செடி இருக்கும் மண்ணை அடிக்கடி கிளறி விட வேண்டும். மண் கட்டியாக இருந்தால் செடியில் வேர் பிடிக்காமல் போய்விடும். அதனால் மண்ணை கிளறிவிட்டு மாட்டு உரம் இதுபோன்று ஏதாவது உரம் கொடுக்க வேண்டும். இதுபோல கொடுத்தால் செடி நன்றாக வளரும். 

7 நாட்களிலே பூக்காத மல்லிப்பூ செடியும் துளிர்விட்டு பூக்கள் பூக்க இதை மட்டும் செய்யுங்க

காய்ந்த செடி துளிர்க்க மோர் சீயக்காய் கரைசல்:

ரோஜா செடி துளிர் விட

காய்ந்த செடியில் கூட துளிர்விடும் பண்புகளை கொண்டது தான் மோர். அதனால் இன்று நாம் 7 நாட்கள் வரை நன்றாக புளித்த மோரை எடுத்து கொள்வோம்.

முக்கியமாக புதிய மோரை எடுத்து கொள்ளக்கூடாது. புதிய மோரை நாம் செடிகளுக்கு ஊற்றினால், அது செடிகளுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் நன்கு புளித்த மோர் 1 டம்ளர் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அந்த மோரில் 1 ஸ்பூன் அளவு ஏதாவது சீயக்காய் தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பிறகு 10 லிட்டர் தண்ணீரில் இதை கலந்து செடிகளுக்கு ஊற்றுங்கள். இதுபோல ஊற்றி வந்தால் காய்ந்த ரோஜா செடியில் துளிர் வரும். ரோஜா செடி நன்றாக வளர்த்து பூக்கள் அதிகமாக பூக்கும்.

புதிதாக நட்ட ரோஜா செடிகள் சீக்கிரம் துளிர்விட இத பண்ணலாமா…

செம்பருத்தி செடியில் 7 நாட்களில் பூக்கள் தாறுமாறாக பூக்க இத Try பண்ணி பாருங்க…..

ஆன்மிக மற்றும் மருத்துவ குணம் வாய்ந்த துளசி செடி செழிப்பாக வளர வேண்டுமா ..அப்போ இந்த 3 Tips follow பண்ணுக…

ஒரே வாரத்தில் பூக்காத மல்லிகை பூச்செடியும் பூத்து குலுங்க எலுமிச்சை பழம் போதும்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now