Roja Sediyil Athiga Pookal Pooka Tips
பொதுவாக ஒரு சில வீடுகளில் பார்த்தால் எண்ணற்ற பூச்செடிகளும், காய்கறி செடிகளும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இவ்வாறு பார்த்தவுடன் முதலில் தோன்றுவது என்னவோ எப்படி இவை அனைத்தையும் செழிப்பாக வளர்த்து இருப்பார்கள் என்பதே. ஏனென்றால் பூச்செடிகளை சரியான முறையில் வளர்த்தாலும் கூட அதில் நிறைய மகசூல் தரும் அளவிற்கு பூக்களை பூக்க செய்வது என்று சற்று கடினமான ஒன்றாக இருக்கிறது. அப்படி பார்த்தால் ஒவ்வொரு பூச்செடிகளையும் நாம் சரியான முறையில் நடவு செய்வது முதல் அதில் பூக்களை பூக்க செய்வது வரை எண்ணற்ற முறைகளை பின்பற்ற வேண்டியது இருக்கும். ஆகவே இத்தகைய முறைகளில் ஒன்றாக இன்று ரோஜா செடியில் எண்ணற்ற மலர்கள் பூத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பூக்கவே பூக்காத செம்பருத்தி செடியும் பூத்து குலுங்க 1 துண்டு இஞ்சி போதும்
ரோஜா செடி துளிர் விட்டு அதிக பூக்கள் பூக்க:
நாம் தோட்டத்தில் நடும் எந்த செடியாக இருந்தாலும் அதற்கு நிறைய வெயில் வெளிச்சம் இல்லை என்றாலும் கூட போதுமான அளவு வெயில் இருக்க வேண்டும். ஏனென்றால் அப்போது தான் ரோஜா செடி துளிர் விட்டு வளர ஆரம்பிக்கும்.
ஆகையால் இதற்கு ஏற்றவாறு சிறந்த மண் கலவையுடன் ரோஜா செடியினையும் நடவு செய்யுங்கள். பின்பு ரோஜா செடியில் பூக்கள் பூக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருளை எடுத்துவிடுங்கள்.
- மஞ்சள்தூள்- 2 ஸ்பூன்
- தண்ணீர்- 1 லிட்டர்
- சாதம் கஞ்சி- 1/2 லிட்டர்
முதலில் 1 லிட்டர் தண்ணீரில் 2 ஸ்பூன் மஞ்சள் தூளினை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பின்பு அதனை இறக்கி 8 மணி நேரம் வரை மூடி வைத்து விடுங்கள்.
8 மணி நேரம் கழித்து தயார் செய்து வைத்துள்ள மஞ்சள் தண்ணீருடன் 1/2 லிட்டர் சாதம் வடித்த கஞ்சியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்போது கலந்து வைத்துள்ள தண்ணீரை ஒவ்வொரு செடிக்கும் 200 மில்லி என்ற அளவில் கொடுங்கள். அதேபோல் இந்த தண்ணீரை ஊற்றிய பிறகு சாதாரண தண்ணீரை ஊற்றக்கூடாது.
இந்த தண்ணீரை நீங்கள் வாரம் 1 முறை கொடுத்தால் போதும் ரோஜா செடிகள் நன்றாக துளிர் விட ஆரம்பித்து நிறைய பூக்களும் பூக்க ஆரம்பித்து விடும்.
விடாப்பிடியான கறைகளை ஒரே சலவையில் நீக்க என்ன செய்யலாம்..
பூக்காத செம்பருத்தி செடியிலும் மலர்கள் பூத்து குலுங்க 1 ஸ்பூன் வெந்தயம் போதுமே
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |