ஒரே தண்டில் 100 மொட்டுக்கள்..! ரோஜா செடி பூத்து குலுங்க இந்த 2 பொருள் போதும்..!

Advertisement

ஒரே தண்டில் 100 மொட்டுக்கள் வைக்க 

பொதுவாக நம் அனைவருக்குமே வீட்டை சுற்றி அழகழகாக பூச்செடிகள் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். கிராமம் எப்போதும் பச்சை பசேல் என்று தான் இருக்கும். ஆனால் நாம் சிட்டிக்கு வந்தால் நம் கண்ணுக்கு மரங்கள் தெரிவதே அரிதாக இருக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் சிட்டியில் வசிப்பவர்கள் மாடியில் மாடித்தோட்டம் அமைத்து மரம் செடிகளை வளர்த்து வருகிறார்கள். அதிலும் இப்போது இருக்கும் காலகட்டத்தில் அனைவரின் வீடுகளிலும் மாடித்தோட்டம் அமைத்து சிறிய விவசாயமே செய்து வருகிறர்கள்.

இது நம் அனைவருக்குமே மகிழ்ச்சி அளிக்கும் ஓன்று தான். பெரும்பாலும் நம் அனைவருக்குமே பூச்செடிகள் வளர்க்க ஆசை இருக்கும். அதிலும் ரோஜா செடி என்றால், சொல்லவே வேண்டாம். நாம் ஆசையாக ரோஜா செடி வாங்கி வந்து வளர்ப்போம். ஆனால் அது ஒழுங்காக வளராமல் பூக்கள் பூக்காமல் போய்விடும். அதனால் இந்த பதிவில் ரோஜா செடியின் ஒரே தண்டில் 100 மொட்டுக்கள் வைக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். வாங்க..!

பூக்காத முல்லை பூச்செடியும் பூத்து குலுங்க பழைய சாதம் போதும்

ஒரே ஒரு வாழைக்காய் போதும்.. பூக்காத மல்லிகை செடியும் கிலோக்கணக்கில் பூத்து குலுங்கும்

ஒரே தண்டில் 100 மொட்டுக்கள் வைக்க சூப்பர் டிப்ஸ்: 

rose plant grow tips in tamil

நீங்கள் உருளைக்கிழங்கு சமைக்கும் போது அதன் தோலை மட்டும் சீவி எடுத்து கொள்ளுங்கள். முதலில் ஒரு கப்பில் தேவையான அளவு தண்ணீர் எடுத்து கொள்ளவும். பின் அதில் உருளைக்கிழங்கு தோலை மட்டும் சீவி போட்டு கொள்ளவும்.

இப்போது இதை ஒரு பிளாஸ்டிக் கவரை கொண்டு மூடி 5 நாட்கள் வரை அப்படியே வைக்கவும். பின் 5 நாட்கள் கழித்து பார்த்தால், அது நுரைத்து வந்திருக்கும்.

பின் அந்த நீருடன் மேலும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்போது இந்த நீரை ரோஜா செடிகளுக்கு ஊற்ற வேண்டும். இதுபோல 15 நாட்களுக்கு ஒரு முறை ஊற்றி வந்தால் செடி நன்றாக வளர்ந்து பூக்கள் பூத்து குலுங்கும்.

இந்த தண்ணீர் போதும் மல்லிகை செடியில் மொட்டுக்கள் குறையவே குறையாது

கொத்து கொத்தாக மொட்டுக்கள் வைக்க டிப்ஸ்:   

rose plant grow tips in tamil

அடுத்து வாழைப்பழத்தின் தோலை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். அந்த தோலை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின் அந்த தோலை ரோஜா செடி இருக்கும் மண்ணை கிளறிவிட்டு, அதில் போடவும்.

அதுபோல இந்த வாழைப்பழத்தின் தோலை நீரில் 3 நாட்கள் ஊறவைத்து அந்த நீரையும் ரோஜா செடிக்கு ஊற்றலாம். இதுபோல ஊற்றி வந்தாலே ரோஜா செடி நன்றாக வளர்ந்து பூக்கள் அதிகமாக பூத்து குலுங்கும்.

வாழைப்பழத்தோல் மற்றும் உருளைக்கிழங்கு தோல் இரண்டிலுமே பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் அதிகமாக இருக்கிறது. அதனால் இது செடியை நன்றாக வளர செய்யும்.

பூக்கவே பூக்காத செம்பருத்தி செடியும் பூத்து குலுங்க 1 துண்டு இஞ்சி போதும்

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement