Rose Plant Grow Tips
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக அனைவருக்குமே வீட்டை சுற்றி அழகழகான செடிகள் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்காக நர்சரியில் இருந்து காசு கொடுத்து பல விதமான செடிகளை வாங்கி வந்து வளர்ப்பார்கள். ஆனால் அப்படி வளர்க்கும் போது சில வீடுகளில் மட்டும் தான் செடிகள் நன்றாக வளரும். சில வீடுகளில் செடிகள் வாடி போய்விடும். உடனே அவர்கள் வீட்டில் மட்டும் செடிகள் செழிப்பாக வளர்கிறது. நம் வீட்டில் ஏன் செடிகள் வளரவில்லை என்று சொல்லி புலம்புவரா நீங்கள். அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு. வாடிய ரோஜா செடிக்கு உயிர்கொடுத்து அதை வளர செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
தக்காளி செடியில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க இதை மட்டும் செய்யுங்கள் போதும் |
Flower Plant Growth in Tamil:
பொதுவாக நம் வீட்டில் வளர்க்கும் ரோஜா செடிகளில் ஏதாவது ஒரு குறை கட்டாயம் இருக்கும். அதாவது சில செடிகளில் இலைகள் உதிர்ந்து கொண்டே இருக்கும். சில செடிகளில் மொட்டுகளே வைக்காது.
இன்னும் சில செடிகளில் மொட்டுக்கள் இருக்கும் ஆனால் அதுவும் கொட்டிவிடும். மேலும் சில செடிகளில் பூக்களே போகாது. இதுபோல பல குறைகள் இருக்கின்றன. அப்படி இருக்கும் குறைகள் அனைத்திற்கும் ஒரே தீர்வாக இந்த பதிவு இருக்கும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள் => கத்திரிக்காய் செடியில் கொத்து கொத்தாக காய் காய்க்க வேண்டுமா அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்
உங்கள் வீட்டில் வளர்க்கும் ரோஜா செடிகளில் உள்ள இலைகள் உதிர்ந்து விட்டால் உடனே நாம் செடியின் கிளைகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் நறுக்கி விடுவோம். அதுபோல நீங்கள் செடிகளை மேலே நறுக்கிவிட்டால் செடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் செடிகளில் துளிர் வராமல் போய்விடும்.
அதனால் ரோஜா செடியை நறுக்கும் போதும் ரோஜா செடியின் அடியில் அதாவது செடியின் வேர்ப்பகுதியில் இருந்து உங்கள் பாதி கையின் அளவிற்கு தண்டை விட்டு நறுக்கி விட வேண்டும். இதுபோல செய்வதால் வாடிய செடிகள் கூட மறுபடியும் துளிர்விட ஆரம்பிக்கும். மேலும் செடிகளில் பூக்களும் அதிகமாக பூக்கும்.அதுபோல நாம் செடிகளை நறுக்கும் போது ஒரே கட்டிங்கில் செடியை நறுக்க வேண்டும். அப்போது தான் செடிகளில் துளிர் வரும். ரோஜா செடிகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உரம் கொடுக்க வேண்டும்.
மேலும் செடிகளுக்கு உரம் கொடுக்கும் போது அதன் அடிப்பகுதியில் இருக்கும் மண்ணை கிளற விட்டு உரத்தை போட்டு மறுமுறையும் மண்ணை கிளறி விட வேண்டும். அதுபோல ரோஜா செடிக்கு போதுமான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
இதுபோல செய்து வந்தால் வாடிய ரோஜா செடியில் கூட பூக்கள் பூக்க வைக்கலாம்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள் => செடிகளை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க இதை மட்டும் செய்யுங்கள்
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |