ஒரே ஒரு கிளாஸ் மட்டும் இதை ஊற்றுங்கள்.. குச்சியாக இருந்த ரோஜா செடியும் பூத்து குலுங்கும்..!

Advertisement

Rose Plant Growing Faster in Tamil

பொதுவாக இந்த உலகில் எவ்வளவு வகையான பூக்கள் இருந்தாலும் கூட சிறியவர் முதல் பெரியவர் முதல் அனைவருக்குமே மிக மிக பிடித்த ஒரு பூவகை என்றால் அது ரோஜா பூக்கள் தான். ஏனென்றால் இதில் பலவகையான நிறங்கள் மற்றும் பார்ப்பதற்கு மற்றவர்களை கவரும் வகையில் இருக்கும். அதனால் அனைவருக்குமே இதனை தங்களது வீடுகளில் மிக மிக விரும்பி வளர்ப்பார்கள். அப்படி நாம் வளர்க்கும் ரோஜா பூச்செடி சரியாக வளராமல் காய்ந்து போகிவிடால் நாம் மிக மிக வருத்தப்படுவோம். அதனால் இன்றைய பதிவில் காய்ந்த ரோஜா பூச்செடியையும் நன்கு வளரவைத்து அதிக அளவு பூக்கள் பூக்க வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க. 

ஒரே ஒரு வாழைக்காய் போதும் பூக்காத மல்லிகை செடியும் கிலோக்கணக்கில் பூத்து குலுங்கும்

ரோஜா செடி வளர்ப்பு முறை:

How to improve rose plant growth in tamil

முதலில் ஒரு செடி நன்கு வளர வேண்டும் என்றால் அதற்கு நன்கு சூரிய ஒளி கிடைக்க வேண்டும். எனவே தான் நாம் நமது ரோஜா செடியினை நன்கு சூரிய ஒளி படும் இடத்தில் நடவு செய்யவேண்டும்.

அதேபோல் காய்ந்து போன ரோஜா செடியின் நுனிப்பகுதியை சிறிதளவு நறுக்கிவிட்டு அதன் மீது சிறிதளவு தொழுஉரத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளுங்கள்.

இப்பொழுது அதற்கு என்ன உரம் அளித்தால் அது நன்கு செழித்து வளர்ந்து அதிக அளவு பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

  1. வாழை பழத்தோல் – 1
  2. காபி தூள் – 1 டேபிள் ஸ்பூன் 
  3. டீத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  4. தயிர் – 2 டேபிள் ஸ்பூன்  
  5. தண்ணீர் – தேவையான அளவு 
  6. ஸ்ப்ரே பாட்டில் – 1

பூக்கவே பூக்காத செம்பருத்தி செடியும் பூத்து குலுங்க 1 துண்டு இஞ்சி போதும்

செய்முறை:

வாழைக்காய்

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 வாழை பழத்தோலை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் இந்த வாழை பழத்தோல் நன்கு வேக தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அதில் நறுக்கிய வாழை பழத்தோலை சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள்.

பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் காபி தூளை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். பின்னர் அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் டீத்தூளையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.

பின்னர் அதனை அடுப்பில் இருந்து இறக்கி ஒரு நாள் முழுவதும் அப்படியே விடுங்கள். மறுநாள் அதனை நன்கு வடிகட்டி கொள்ளுங்கள். அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையில் இருந்து ஒரு கிளாஸ் எடுத்து அதனுடன் இரண்டு கிளாஸ் தண்ணீரை சேர்த்து அதனை 1 ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ரோஜா செடியின் வேர் மற்றும் நுனி பகுதிகளில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.

இதனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் ரோஜா செடியில் அதிக பூக்கள் பூக்க தொடங்குவதை நீங்களே காணலாம்.

காய்ந்த ரோஜா செடியும் 5 நாட்களில் துளிர்விட்டு பூக்கள் பூத்து குலுங்க வாழைப்பழம் மட்டும் போதும்

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement