Rose Plant Growing Tips Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. பலருக்கு இருக்கும் பிரச்சனை இது பொதுவாக நர்சரிக்கு சென்று ரோஜா செடிகளை வாங்கி வந்து வீட்டில் வளர்ப்பார்கள், இருப்பினும் அது குறுகிய காலத்திலேயே அது பட்டுபோய்விடும் அல்லது காய்ந்து போய்விடும் அல்லது அழுகி போய்விடும் அவர்களுக்கான பதிவு இது. முடிந்தவரை ரோஜா செடியை வீட்டில் எப்படி பத்தியம் போட வேண்டும், ரோஜா செடியை பராமரிக்க வேண்டும் என்று தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
டிப்ஸ்: 1
புதிதாக வாங்கிய ரோஜா செடியை அந்த கவருடனேயே அப்படியே வைத்துவிட கூடாது அதனை நிலத்திலோ அல்லது மண் தொட்டியில அல்லது Grow bag இவற்றில் ஏதாவது ஒன்றில் மாற்றி இன்னும் கொஞ்சம் கூடுதலாக மண் கொடுக்க வேண்டும். ஆக மண் தொட்டி அல்லது Grow bag-ஆக இருந்தால் அது கொஞ்சம் பெரிய அளவில் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள்.
அதேபோல் நர்சரியில் இருந்து கவருடன் வாங்கி வைத்த ரோஸ் செடியை தனியாக எடுக்கும் போது அவற்றில் இருக்கும் மண் உடைந்துவிடாமல் எடுக்கவும் இல்லையன்றால் செடியில் இருக்கும் வேர் பகுதி அறுந்துவிடும் இதன் செடி காய்ந்து போவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வேண்டாம் என்று ஒதுக்கும் பொருட்களை கொண்டு உங்க ரோஜா செடியில் கொத்து கொத்த பூ பூக்க வைக்கலாம்.
டிப்ஸ்: 2
அவ்வாறு கொடுக்கும் மண் நல்ல மண் கலவையாக இருப்பது மிகவும் சிறந்தது, நிலத்தில் குழி நோண்டும் போதோ, மண் தொட்டி அல்லது Grow Bag-யில் மண் கொடுக்கும் போது முதலில் TAB Root Fertilizer அல்லது மண்புழு உரம் ஏதாவது ஒன்றை கொடுக்கலாம்.
டிப்ஸ்: 3
நிலத்திலோ அல்லது மண் தொட்டியிலோ அல்லது Grow Bag செடியை வைத்து மண் நிரப்பும் போது குறைந்தது மூன்று இன்ச் இடைவெளி இடம் விட்டு மண் நிரப்புங்கள், ஏன் என்றால் அப்பொழுது நான் தண்ணீர் அவற்றில் கொஞ்சம் தேங்கி நிக்கும். செடிக்கு தேவையான நீர் கிடைக்கும்.
டிப்ஸ்: 4
ரோஸ் செடிகளை நன்கு வெயில் அடிக்கும் இடத்தில் தான் வைக்க வேண்டும். அப்பொழுது தான் செடிகள் நன்கு வளரும், பூக்களும் பூக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரே ஒரு பீர்க்கங்காய் போதும் பூக்காத முல்லை செடியிலும் 1000 பூக்கள் பூக்கும்..!
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |