Rose Plant Growth Fertilizer in Tamil
வணக்கம் பிரண்ட்ஸ்..! உங்களுக்கு வீட்டை சுற்றி பூ செடிகள் வளர்க்க பிடிக்குமா..? பொதுவாக நம் அனைவருக்குமே வீட்டை சுற்றி அழகிய பூச்செடிகளை வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனாலே இன்றைய நிலையில் பலரும் மாடி தோட்டம் அமைத்து செடிகளை வளர்த்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மாடித்தோட்டத்தில் குட்டி விவசாயமே செய்து வருகிறார்கள். அதனால் நாம் நர்சரியில் இருந்து செடிகளை வாங்கி வந்து வளர்க்கிறோம்.
அப்படி நாம் வாங்கும் பூச்செடிகளில் ரோஜா செடி தான் முதல் இடத்தை பிடிக்கிறது. அதுபோல சில வீடுகளில் ரோஜா செடி நன்றாக வளர்ந்து அதிக பூக்கள் பூக்கும். ஒரு சில வீடுகளில் பூக்கள் பூக்கவே பூக்காது. இன்னும் சில வீடுகளில் ரோஜா செடியின் குச்சி மட்டும் தான் இருக்கும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் குச்சியாக இருக்கும் ரோஜா செடியில் துளிர் வர செய்யும் கரைசலை பற்றி பார்க்கலாம் வாங்க..!
வாடிய ரோஜா செடியில் கூட பூக்கள் பூக்க வைக்கலாம்.. அதுக்கு இப்படி செய்யுங்க..
குச்சியாக இருக்கும் ரோஜா செடியை துளிர்விட செய்யும் கரைசல்:
முதலில் குச்சியாக இருக்கும் ரோஜா செடியின் நுனி பகுதியை நறுக்கி விட வேண்டும். அடுத்து நெருக்கிய அந்த நுனி பகுதியில் மாட்டு சாணம் அல்லது வேப்ப எண்ணெய் அல்லது மஞ்சள் போன்றவற்றை வைக்க வேண்டும். அப்போது தான் செடி வாடிப்போகாமல் இருக்கும்.
அடுத்து ரோஜா செடியின் அடிப்பகுதியில் இருக்கும் மண்ணை கிளறி விட்டு அதில் மாட்டு உரத்தை போட வேண்டும். அதுபோல நாம் செடிக்கு எந்த உரம் கொடுப்பதாக இருந்தாலும் செடியின் அடிப்பகுதியில் இருக்கும் மண்ணை கிளறி விட்டு அதன் பின் தான் உரம் போடவேண்டும். பின் மறுமுறையும் மண்ணை கிளறி விட வேண்டும்.
காய்ந்த செடிகள் கூட 3 நாட்களில் துளிர்விடும்.. அதற்கு இந்த கரைசலை 1 கிளாஸ் ஊற்றுங்க போதும்..
அடுத்து நாம் 1/2 லிட்டர் அளவிற்கு புளித்த மோர் எடுத்து கொள்ள வேண்டும். அதில் 1 ஸ்பூன் அளவிற்கு சீயக்காய் தூய் சேர்த்து கொள்ளலாம். எந்த சீயக்காய் தூளாக இருந்தாலும் சேர்த்து கொள்ளலாம். உதாரணதிற்கு கார்த்திகா சீயக்காய் தூள் 1 பாக்கெட் போதும்.
இப்போது தயிர் மற்றும் சீயக்காய் தூள் இரண்டையும் நன்றாக கலந்து 1 நாள் முழுவதும் அப்படியே மூடி வைக்க வேண்டும். மறுநாள் அந்த கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது இந்த நீரை குச்சியாக இருக்கும் ரோஜா செடிக்கு ஊற்ற வேண்டும். இந்த கரைசலை மற்ற பூச்செடிகளுக்கும் ஊற்றலாம். இதுபோல தொடர்ந்து ஊற்றி வந்தால் குச்சியாக இருக்கும் ரோஜா செடி 3 நாட்களில் துளிர்விட ஆரம்பிக்கும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள் => செடிகளை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க இதை மட்டும் செய்யுங்கள்
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |