Samanthi Poo Sedi Athigam Pooka Tips in Tamil
இன்றைய கால கட்டத்தில் அனைவருமே தாவரங்கள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பூச்செடிகள் வளர்பதில் அதிக அளவு ஆர்வம் கொண்டுள்ளனர். அப்படி நாம் வளர்க்கும் பலவகையான பூச்செடிகளில் ஒன்று தான் இந்த சாமந்தி பூச்செடி. இந்த பூச்செடிகள் பூத்து குலுக்கினாள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இப்படி இந்த சாமந்தி பூச்செடிகள் வளர்ப்பவர்கள் அனைவருமே கூறுவது நான் எனது செடிகளை நன்றாக தான் பராமரித்து கொள்கின்றேன். ஆனால் எனது சாமந்தி பூச்செடிகளில் அதிக அளவு பூக்களே பூக்கவில்லை என்பது தான். அப்படி கவலைப்படுபவர்களுக்காக தான் இன்றைய பதிவில் சாமந்தி பூச்செடிகளில் அதிக அளவு பூக்கள் பூக்க உதவும் குறிப்பினை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
பூக்காத மல்லிகை பூ செடியிலும் பூக்க வைப்பதற்கு வெந்தயம் மட்டும் போதும்
Best Liquid Fertilizer for Samanthi Flower Plant in Tamil:
நீண்ட நாட்களாக உங்க வீட்டில் பூக்காமல் உள்ள சாமந்தி பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்க வைக்க உதவும் ஒரு குறிப்பினை இங்கு காணலாம்.
இந்த குறிப்பிற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பார்க்கலாம் வாங்க.
- வாழைப் பழத்தோல்- 4
- முட்டை ஓடு – 5
- எப்சோம் உப்பு – 1 டீஸ்பூன்
- தண்ணீர் – 5 லிட்டர்
வாழைப்பழ தோலினை நறுக்கவும்:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 4 வாழைப் பழ தோல்களையும் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி காய வைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து வைத்து கொள்ளுங்கள்.
மிளகாய் செடியில் உள்ள மாவுப்பூச்சினை போக்கி நன்கு காய்க்க இதை ஒரே ஒரு கிளாஸ் ஊற்றுங்கள் போதும்
முட்டை ஓட்டினை அரைக்கவும்:
அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள 5 முட்டை ஓடுகளையும் நிழலில் காய வைத்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து வைத்து கொள்ளுங்கள்.
எப்சோம் உப்புடன் கலந்து கொள்ளவும்:
ஒரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் எப்சோம் உப்பினை சேர்த்து அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் வாழைப்பழத்தோல் பொடி மற்றும் 1 டீஸ்பூன் முட்டை ஓடு பொடி இரண்டினையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
தண்ணீருடன் கலக்கவும்:
இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 5 லிட்டர் தண்ணீருடன் நாம் கலந்து வைத்துள்ள எப்சோம் உப்பு , வாழைப்பழத்தோல் பொடி மற்றும் முட்டை ஓடு பொடி கலவையை சேர்த்து நன்கு கலந்து 1 மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள்.
பின்னர் இதனை எடுத்து உங்களின் சாமந்தி பூச்செடிகளின் வேர்களில் ஊற்றுங்கள். இதனை வாரத்திற்கு இருமுறை என்று தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நீண்ட நாட்களாக பூக்காத சாமந்தி பூச்செடியும் கிலோ கணக்கில் பூக்கள் பூப்பதை நீங்களே காணலாம்.
பூக்கவே பூக்காத செம்பருத்தி செடியிலும் கூடை கூடையாக பூக்கள் பூக்க வேர்க்கடலை மட்டும் போதும்
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |