சாமந்தி பூ செடியில் பூக்கள் பூக்க
பூக்களில் நிறைய வகைகள் இருந்தாலும் கூட அதில் நாம் அனைத்து வகையான பூக்களையும் தலையில் வைத்துக் கொள்வது இல்லை. ஏனென்றால் பூக்களில் ஒரு சிலயானவை மட்டும் கடவுள்களுக்கு சூட்டக் கூடியதாகவும் இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் வீடு கிரகப்பிரவேசம் மற்றும் மாலை கட்டுதல் என இவை அனைத்திற்கு பெரும்பாலும் பயன்படக்கூடியது சாமந்தி பூ தான். இத்தகைய சாமந்தி பூ செடியினை வீட்டிலேயே வளர்த்து நபர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவ்வாறு வளர்த்து வரும் பட்சத்தில் ஒரு சில செடிகளில் மட்டும் பூக்களே பூக்காமல் அப்படியே கொண்டே இருக்கிறது. அதனால் இன்று பூக்காத சாமந்தி பூ செடியிலும் அதிகமாக பூக்கள் பூக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க.!
பூக்காத மல்லிகை பூ செடியிலும் பூக்க வைப்பதற்கு வெந்தயம் மட்டும் போதும்
Marigold Flower Growing Tips:
பூக்காத சாமந்தி பூ செடியிலும் பூக்கள் பூக்க செய்வதற்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- வாழைப்பழத்தோல்
- முட்டை ஓடு
- எப்சம் சால்ட்
முதலில் எடுத்துவைத்துள்ள வாழைப்பழத்தோலை 2 நாட்கள் வரை வெயிலில் காய வைத்து விடுங்கள். அதன் பிறகு 2 நாட்கள் கழித்து மிக்சி ஜாரில் காய்ந்த தோலை சேர்த்து நன்றாக பவுடர் போல அரைத்து விடுங்கள்.
அடுத்து முட்டை ஓட்டினையும் காய வைத்து தண்ணீர் இல்லாமல் பவுடர் போல அரைத்து தனியாக வைத்து விடுங்கள்.
இப்போது 1 பவுலில் 5 ஸ்பூன் வாழைப்பழத்தோல் பவுடர், 4 ஸ்பூன் முட்டை ஓடு பவுடர் மற்றும் 3 ஸ்பூன் எப்சம் உப்பு சேர்த்து நன்றாக ஒரு ஸ்பூனால் கலந்து விடுங்கள்.
கடைசியாக 5 லிட்டர் தண்ணீரில் கலந்து வைத்துள்ள பொடியினை சேர்த்து கலந்து 1 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். 1 மணி நேரம் கழித்து மண்ணை கிளறி விட்டு இந்த கரைசலை சாமந்தி பூ செடிகளிலுக்கு ஊற்றி விடுங்கள்.
பயன்கள்:
இந்த கரைசலை செடிக்கு அளிப்பதன் மூலம் மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், நார்சத்து மற்றும் நைட்ரஜன் போன்ற சத்துக்கள் கிடைத்து செடிகளில் பூக்கள் நிறைய பூத்து குலுங்க ஆரம்பித்து விடும்.
ஆகையால் வாரம் 1 முறை இந்த கரைசலை செடிகளுக்கு அளிக்க வேண்டும்.
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |