சாமந்தி செடி பதியம் போடுவது எப்படி? Samanthi Sedi Pathiyam in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் சாமந்தி பூ பதியம் போடும் முறையை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். சாமந்தி பூவில் நிறைய வகைகள் உள்ளது. மஞ்சள், ஊதா, சிவப்பு, இளஞ்சிவப்பு, ரோஸ், வெள்ளை என்று நிறைய வகைகள் உள்ளது. இந்த வகையான செடிகளுக்குமே ஒரே முறையில் தான் பதியம் போட வேண்டும். குறிப்பாக இந்த செடி மிகவும் எளிதில் வளரக்கூடிய செடி என்று சொல்லலாம். இந்த செடியை வேருடன் வளர்பதைவிட, செடியில் உள்ள கிளைகளை கட் செய்து பதியம் வைத்தால் நன்றாகவே செடி வளர்ந்து பூ பூக்கும். இந்த செடியை நாம் நர்சரியில் தான் வாங்க வேண்டும் என்று எந்த ஒரு அவசியமும் இல்லை. உங்களுக்கு சிறிதாக இரண்டு கிளைகள் கிடைத்தாலே போதும், அந்த கிளையை கொண்டு மிக எளிதாக சாமந்தி செடியை வளர செய்யலாம். சரி வாங்க இந்த சாமந்தி பூவை எப்படி பதியம் போடலாம் என்று பார்க்கலாம்.
சாமந்தி செடி வளர்ப்பது எப்படி?
இந்த சாமந்தி செடியை நீங்கள் மண்புழு உரம் மற்றும் கோகோபீட் ஆகிய இரண்டுயும் சேர்த்து நன்றாக கலந்து நடலாம். அதேபோல் உங்களுக்கு செம்மண் கிடைத்தாலும் அந்த செம்மண்ணை கலந்தும் சாமந்தி செடியை வளர்க்கலாம்.
சாமந்தி செடியில் இருந்து சிறு சிறு கிளைகளை கட் செய்து மணலில் நட்டு வைத்தீர்கள் என்றாலே செடி நன்றாக வளரும்.
இந்த செடிக்கு அதிகமாக பராமரிப்பு முறை இருக்காது. அரிசி கழுவிய தண்ணீர், காய்கறி கழிவுகள் ஆகியவற்றை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உங்கள் செடிகளுக்கு கொடுக்கலாம்.
நீங்கள் எந்த தொட்டியில் செடியை வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த தொட்டியிலேயே செடியை நட்டு வைக்கலாம். இல்லை என்றால் ஒரு தொட்டியில் மொத்தமாக செடியை நட்டுவைத்துவிட்டு. அந்த செடி வேர் பிடித்து வளர்ந்த பிறகு வேறொரு தொட்டிக்கு செடியை மாற்றிக்கொள்ளலாம். எல்லாம் உங்கள் விருப்பம் தான்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாடித்தோட்டம் மாதுளை சாகுபடி முறை..!
தொட்டியில் செடிகளை நட்டு வைத்த பிறகு வெயில் படும் இடத்தில் தொட்டியை எடுத்து வைக்கவும். ஒரு மாதங்களுக்கு பிறகு நட்டு வைத்த செடிகள் அந்த தொட்டியில் வளர ஆரம்பித்துவிடும்.
குறிப்பாக இந்த செடியை நீங்கள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வளர்ப்பதற்கு ஏற்ற சீசன் ஆகும். இந்த சீசனில் நீங்கள் வளர்த்தால் செடிகள் நன்கு வளரும்.
குறிப்பு:
கட்டிங் மூலமாக வளர்க்கு இந்த சாமந்தி செடி அனைத்தும் வளர்ந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. நிறைய கிளைகளை ஊனி வைத்து வளர்த்தாலும் சில காரணங்களினால் சில செடிகள் வளராமல் செத்து போய்விடும். ஆக நிறைய கன்றுகளை நட்டு வைத்து வளர்க்கவும். அவற்றில் சில கன்றுகளாவது வளர ஆரம்பிக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இட்லி பூ கொத்து கொத்தா பெரியதாக பூக்க இதை மட்டும் செஞ்சி பாருங்க..!
இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |