சாமந்தி பூ அதிகம் பூக்க
பெண்களுக்கு பூச்செடிகள் என்றால் அவ்வளவு பிடிக்கும். ஆனால் இந்த பூச்செடிகளில் பல வகைகள் இருந்தாலும் எல்லா பூக்களையும் தலையில் வைப்பதில்லை. சில பூக்கள் வாசனைக்காகவும், சில பூக்கள் அழகுக்காகவும், சில பூக்கள் கடவுளுக்கு உகந்தவையாகவும் இருக்கிறது. அதனால் நீங்கள் எந்த செடியை சாமந்தி பூச்செடியை வளர்த்தாலும் சரி அவற்றிலிருந்து சரியாகி பூக்கள் பூப்பதில்லை என்று நினைத்தால் நம் பதிவில் நிறைய வகையான செடிகளை அதிக மகசூல் பெறுவது என்று பதிவிட்டு வருகிறோம். அதை பற்றி தெரிந்து கொள்ள கீழ் கொடுப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். இந்த பதிவில் சாமந்தி பூ அதிகம் பூ பூக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
சாமந்தி செடியிலிருந்து அதிக பூக்கள் பூக்க:
மண் கலவை:
சாமந்தி பூச்செடி வளர்வதற்கு களிமண் தான் உகந்த மண்ணாக இருக்கிறது. அப்படி களிமண் இல்லையென்றால் மரத்திற்கு பக்கத்தில் மண்ணானது மக்கி இருக்கும் அதிலிருந்து 2 மடங்கு எடுத்து கொள்ளவும். மணல் 1 மடங்கு, வேப்ப புண்ணாக்கு, தொழு உரம் போன்றவை சேர்த்து கலந்து 7 நாட்கள் வரைக்கும் அப்படியே வைக்க வேண்டும்.
7 நாட்கள் கழித்து செடியை வைப்பதற்கு முன்பு அதில் Epsom salt சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும். அதன் பிறகு செடியை வைக்க வேண்டும். Epsom salt சேர்ப்பதால் வேர்கள் நன்றாக விடுவதற்கும், பூக்கள் அதிகமாக பூப்பதற்கு உதவி செய்கிறது.
பூக்காத சாமந்தி பூச்செடியிலும் பூக்கள் பூத்து குலுங்க இதை மட்டும் பதப்படுத்தி செய்யுங்க போதும்..!
பூக்கள் பெரிதாக என்ன செய்ய வேண்டும்:
பொட்டாசியம் குறைபாட்டால் தான் பூக்களானது பெரிதாகவில்லை. அதனால் பொட்டாசியம் சத்தை அதிகப்படுத்துவதற்கு சாம்பலை தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை செடிக்கு ஊற்ற வேண்டும்.
சாம்பல் இல்லையென்றால் வாழைப்பழ தோலை தண்ணீரில் 3 நாட்கள் ஊற வைத்து அந்த தண்ணீரை செடிக்கு ஊற்றி வரலாம்.
நிறைய பூக்கள் பூப்பதற்கு என்ன செய்ய வேண்டும்:
ஒரு கப் தண்ணீரில் கடலை புண்ணாக்கு, வேப்ப புண்ணாக்கு இரண்டையும் சேர்த்து கலந்து 3 நாட்கள் அப்படியே விடவும். அதன் பிறகு தண்ணீரை நன்றாக கலந்து அதாவது கட்டி இல்லாமல் வெறும் தண்ணீரை மட்டும் செடிக்கு ஊற்ற வேண்டும். இது போல ஊற்றுவதால் செடியில் பூக்கள் அதிகமாக பூக்கும்.
பூக்காத மல்லிகை பூ செடியிலும் பூக்க வைப்பதற்கு வெந்தயம் மட்டும் போதும்
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |