நித்தியமல்லி பூ கொத்து கொத்தாக பூத்து குலுங்க இந்த 5 டிப்ஸை follow பண்ணுங்க..!

நித்திய மல்லி செடி வளர்ப்பது எப்படி

முல்லை பூ வகையை சார்ந்து தான் இந்த சந்தன முல்லை. இதற்கு இன்னொரு பெயரும் உண்டு நித்திய மல்லி ஆகும். இந்த செடியை வீட்டில் வளர்க்க ஆரம்பித்தால் வேகமாக வளரும் தன்மை கொண்டது. ஆனால் சிலர் வீட்டில் இதை வளர்க்க தெரியுமால் வளர்ப்பதால் அது நாளைடைவில் செடியானது வீணாகிப் போகிறது.

எந்த செடியாக இருந்தாலும் அதற்கு தண்ணீர் ஊற்றும் முறையில் ஓன்று உள்ளது. ஆகையால் அந்த வகையில் இன்று சந்தன முல்லை செடியை எப்படி வளர்ப்பது என்று தெரிந்துகொள்வோம் வாங்க..!

நித்திய மல்லி செடி வளர்ப்பு:

சந்தனமுல்லையானது அதிகமாக அனைவரின் வீட்டிலும் காணப்படும் ஆனால் அந்த பூக்கள் அனைத்தும் மிகவும் விரைவாக வாடக்கூடியது ஆகும். இது பார்ப்பதற்கும் சரி சுவாசிப்பதற்கும் சரி நன்றாக இருக்கும். இதனுடைய காம்பு சந்தன நிறத்தில் இருக்கும் வாசமானது மனதிற்கு ஒரு விதமான நேர்மறை ஆற்றலை ஏற்படுத்தும்.

இந்த செடிக்கு அதிகமான சூரிய வெளிச்சம் இருந்தால் போதுமானது அதுவே நிறைய பூக்களை பூத்து குலுங்கும் காலையில் பறித்தால் மாலையில் மறுமுறையும் பூ பூக்கும். இதனை வீட்டின் வாசலில் வைத்தால் மாடி வரை சென்று விடும் வீடும் பார்ப்பதற்கு அழகா இருக்கும். எப்படி இருந்தாலும் நமக்கு நிறைய பூக்களை தர வேண்டும் ஆகவே அதற்கு 5 டிப்ஸை follow பண்ணுங்க.

மல்லிகை பூ செடியில் அதிக பூக்கள் பூக்க டிப்ஸ்..!

டிப்ஸ்: 1 

செடி வைக்க மண் கலவை

முதலில் இதனை தொட்டியில் வைத்தால் அதற்கு நன்கு மண் கலவை வேண்டும் அதேபோல் இது ஒரு கொடி வகையை சார்ந்து என்பதனால் இதற்கு சத்துக்கள் நிறைந்த மண் தேவைப்படும். அது எப்படி இருக்க வேண்டுமென்றால் மாட்டு சாணம், இலை தழைகள், செம்மண் இந்து மூன்றும் கலந்த மணலாக இருக்க வேண்டும். அதில் செடியை வைத்தால் நன்கு வளரும்.

டிப்ஸ்: 2

 santhana poo valara tips in tamil

நாம் தினமும் சாதம் வாடிப்போம் அல்லவா.? அப்படி அரிசி களையும் போது அதில் இருக்கும் தண்ணீரை செடியில் ஊற்றவும். அதேபோல் காய்கறி கழுவினாலும் அந்த தண்ணீரையும் ஊற்றவும், டீ தூள், காபி தூள் அனைத்தையுமே சந்தன முல்லை தொட்டியில் போடவும்.

டிப்ஸ்: 3

நித்திய மல்லி செடி வளர்ப்பு

செடிகளில் பூச்சி தாக்குதல் என்பது அதிகம் இருக்கும். அதற்கு நீங்கள் வேப்பிலை, சோப்பு கரைசல் இரண்டையும் சேர்த்து இலையின் முன்புறமும், பின்புறமும் ஸ்பிரே செய்யவும். அதன் பின் செடியில் எந்த ஒரு பூச்சிகளும் வராது.

டிப்ஸ்: 4

பஞ்ச காவியம், கடல் பாசி அதனை 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரில் வைத்து செடியில் தெளித்து வந்தால் செடிகளுக்கு நல்ல வளர்ச்சியை கொடுத்து கொடியை அனைத்து இடத்திலும் படர செய்யும்.

இதையும் வளர்த்து பாருங்கள் 👉👉 உங்கள் வீட்டிலும் அடுக்கு நந்தியாவட்டை பூச்செடி வளர்க்க ஆசையா..? அப்போ இப்படி செய்யுங்கள்..!

டிப்ஸ்: 5

 நித்திய மல்லி செடி வளர்ப்பது எப்படி

செடிகளில் காய்ந்த இலையை பறித்து விடவும், அதேபோல் பூ பறித்த பின்பும் அதனுடைய காப்பையும் பறித்து விடவும். எப்படி செய்வதால் செடிகளில் புதிய இலை காய் காய்க்கும் அதன் மூலம் நிறைய பூக்கள் பூக்கும்.

முக்கியமாக செடியை சுற்றி நன்கு ஈர பதம் இருந்து கொண்டு தான் இருக்கவேண்டும்.

 

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம்