ரோஜா செடியில் கொத்து கொத்தாக பூ பூக்க
இன்றைய கால கட்டத்தில் அனைவருமே வீட்டு தோட்டம் அமைப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பூச்செடிகள் வளர்ப்பதில் அதிக ஈடுபாடுடன் காணப்படுகின்றனர். அப்படி நாம் விரும்பி வளர்க்கும் பல வகையான பூச்செடிகளில் இந்த ரோஜா பூச்செடியும் ஒன்று. நாம் மிகவும் விரும்பி வளர்க்கும் ரோஜா பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்கவில்லை என்றால் நமது மனம் மிகவும் கவலைப்படும். அப்படியென்றால் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் இருக்கும் ரோஜா செடியில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுவதுமாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன்பெறுங்கள்…
கொத்து கொத்தாக பூ பூக்க:
ரோஜா செடியில் பூக்கள் அதிகமாக பூக்க:
Tips 1:
ரோஜா பூ செடிகளின் வேர்களில் மாட்டு சாண எருது மணலுடன் கலந்து வைப்பதால், அது செடிக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் வழங்குகிறது. மாட்டு சாணத்தால் கிடைக்கும் ஊட்டசத்தால் மல்லிகை செடிகளில் அதிகம் பூக்கள் பூக்கும்.
Tips 2:
வீட்டில் பயன்படுத்தி விட்டு தூக்கி எரியும் முட்டை ஓடுகள், பழத்தோல்கள் போன்றவற்றை ஒரு தட்டில் போட்டு காயவைத்து பின்னர் அதனை அரைத்து உங்கள் ரோஜா செடியின் வளர்ச்சிக்கு ஏற்ப அதன் வேர்களில் போட வேண்டும்.
உங்கள் செடியின் வளர்ச்சி குறைவதாக நினைத்தால் வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம். இதனை மண்ணுடன் கலந்து வேர்களில் சேர்க்க வேண்டும்.
Tips 3:
உங்கள் வீட்டில் உள்ள இட்டலி மாவு நன்றாக புளித்த உடன் அதனை 2 கரண்டி எடுத்து ஒரு கப் தண்ணீரில் கலந்து அதனை உங்கள் செடிக்கு நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.
ரோஜா பூக்கள் பூத்து முடித்ததும் ரோஜா செடிகளை கிளைகளை சிறிது வெட்டிவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் செடி மீண்டும் துளிர்த்து அதிகப்படியான விளைச்சலை தரும்
உங்களுக்கு பிடித்த மணி பிளாண்டை எவ்வாறு கவனமாக வளர்ப்பது என்று தெரியுமா…..
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |