தற்சார்பு முறையில் தோட்டம் அமைத்து பயிர் செய்யும் முறை..!

self sustaining garden in tamil

தோட்டம் அமைத்தல்

அனைவருடைய வீட்டிலும் நிறைய வகையான பூச்செடிகள் மற்றும் காய்கறி செடிகள் வளர்த்து வருகின்றனர். அதிலும் சிலர் மாடித்தோட்டம் அமைத்தும் கூட செடிகளை பராமரித்து வருகின்றனர். நம்மை பொறுத்தவரை மாடித்தோட்டம், சொட்டுநீர் பாசனம், மற்றும் இயற்கை விவசாயம் ஆகிய முறைகளில் தான் செடிகளை வளர்த்து வருகிறோம். ஆனால் இந்த முறையில் பயிர்செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. சிலர் இவற்றை கூட பயிர்செய்ய முடியாத இடத்தில் இருக்கிறார்கள். ஆகையால் இன்று அனைவருக்கும் உதவும் வகையில் தற்சார்பு முறையில் தோட்டம் அமைத்து பயிர் செய்வது எப்படி என்று பார்க்கப்போகிறோம்.

இதையும் படியுங்கள்⇒ சரியான முறையில் பஞ்சகாவ்யா தயாரிப்பு..!

தற்சார்பு முறையில் தோட்டம் அமைத்தல்:

தற்சார்பு முறையில் தோட்டம் அமைத்தல்

உங்களுக்கு விருப்பம் உள்ள அனைத்து விதமான செடி, கொடி மற்றும் மரம் ஆகியவற்றை ஒரே இடத்தில் பயிர் செய்வது எப்படி என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செடிகளை பயிரிடும் முறை:

நீங்கள் தோட்டம் அமைப்பதற்கு சிறிய அளவில் இடம் இருந்தாலும் அதில் செய்யலாம். அதனால் முதலில் பயிர் செய்வதற்கு தேவையான இடத்தை தயார் செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு அந்த இடத்தில் முதலில் மரக்கன்றுகள், இரண்டாவதாக காய்கறி செடிகள்,  மூன்றாவதாக பூச்செடிகள் வரிசைப்படுத்தி பயிர் செய்து கொள்ளுங்கள். முக்கியமானது என்னவென்றால் நீங்கள் பயிர் செய்யும் இடத்தில் சூரிய ஒளி இருக்க வேண்டும். 

செடிகளை வளர்ப்பது எப்படி..?

நாம் கலந்து செடிகளை பயிர் செய்வதன் மூலம் அதன் மீது சூரிய ஒளி மற்றும் மற்றொரு செடியில் உள்ள சத்து இரண்டும் கிடைத்து செடிகள் அனைத்தும் நன்றாக செழிப்பாக வளரும்.

பூச்சிகள் எதுவும் செடிகளை அண்டாத அளவிற்கு அதன் மீது வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை பொடி  பொடி ஆகியவற்றை தெளித்து வாருங்கள். நீங்கள் பயிர் செய்ததில் மரங்கள் இருந்தால் அதற்கு இவை இரண்டும் தேவையில்லை.

இதையும் படியுங்கள் ⇒இயற்கை பூச்சி விரட்டி கரைசல் நன்மை..!

செடிகளை பராமரிக்கும் முறை:

பயிர் செய்துள்ள செடிகள் காயத அளவிற்கு ஈரப்பதம் இருக்குமாறு தண்ணீர் ஊற்றி வளர்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு இயற்கையில் முறையில் கிடைக்கும் உரமான பழக்கழிவுகள், காய்கறி கழிவுகள், பருப்பு தண்ணீர், அரிசி தண்ணீர், பூண்டு தோல், பஞ்சகாவியம் மற்றும் தேமோர் கரைசல் ஆகியவற்றை பூச்செடிகள் மற்றும் காய்கறி செடிகளுக்கு அளிக்க வேண்டும்.

இதனை மட்டும் சரியான முறையில் செய்து வந்தால் போதும் செடி நிறைய பூக்கள் மற்றும் காய்கள் காய்க்கும்.

ஒரு முறை இப்படி தற்சார்பு முறையில் விவசாயம் செய்த பிறகு மீண்டும் பயிர் செய்யும் போதும் ஒரே இடத்தில் ஒரே பயிரை விதைக்கலாம் மாற்றி விதைக்க வேண்டும்.

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்.