Sembaruthi Plant Athigam Pokka Enna Seiya Vendum
பொதுவாக மலர்கள் என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மிக மிக அதிகமாக பிடிக்கும். ஏனென்றால் மலர்களை பார்க்கும் பொழுது அவற்றின் வண்ணம் மற்றும் அவற்றின் அழகினை பார்த்து ரசித்து கொண்டே இருந்தால் நமது மனதில் உள்ள அனைத்து கஷ்டங்களும் சிறிதுநேரம் நமது மனதில் இருந்து நீங்கிவிடும். அதிலும் ஒரு சில மலர்கள் நமது மனம் மற்றும் உடலின் ஆரோக்கியத்திற்கும் உதவும். அப்படிப்பட்ட மலர்களில் ஒன்று தான் இந்த செம்பருத்தி பூக்களும். இவற்றை பொதுவாக அனைவருமே தங்களது வீடுகளில் வைத்து வளர்ப்பார்கள் என்றால் செம்பருத்தி செடியில் இருந்து நமக்கு பல வகையான நல்ல பலன்கள் கிடைக்கிறது. ஆனால் நமது வீடுகளில் உள்ள செம்பருத்தி செடி அதிக அளவு பூக்கள் பூக்கவில்லை என்றால் அது நமக்கு வருத்தத்தை அளிக்கும். அதனால் இன்றைய பதிவில் நமது வீடுகளில் உள்ள செம்பருத்தி செடியில் அதிக பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
செம்பருத்தி செடி வளர்ப்பு:
முதலில் ஒரு செடி நன்கு வளர வேண்டும் என்றால் அதற்கு நன்கு சூரிய ஒளி கிடைக்க வேண்டும். எனவே தான் நாம் நமது செம்பருத்தி செடியினை நன்கு சூரிய ஒளி படும் இடத்தில் நடவு செய்யவேண்டும்.
இப்பொழுது அதற்கு என்ன உரம் அளித்தால் அது நன்கு செழித்து வளர்ந்து அதிக அளவு பூக்கள் பூக்கும் என்பதை பற்றி இங்கு காணலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- வாழைப்பழத் தோல் – 4
- அரிசி கழுவிய தண்ணீர் – 2 கப்
- கடலை புண்ணாக்கு – 1 கைப்பிடி அளவு
- தண்ணீர் – 4 கப்
காய்க்காத கத்திரிக்காய் செடியும் கொத்து கொத்தாக காய்க்க இதை 1 கிளாஸ் ஊற்றுங்க
செய்முறை:
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 வாழைப்பழத் தோல்களையும் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 கப் அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் 1 கைப்பிடி அளவு கடலை புண்ணாக்கு ஆகியவற்றை சேர்த்து நன்கு மூடிபோட்டு மூடி ஒரு வாரம் அப்படியே விடுங்கள்.
பயன்படுத்தும் முறை:
அதன் பிறகு அதில் உள்ள தண்ணீரை மட்டும் ஒரு பாத்திரத்தில் வடிக்கட்டி அதனுடன் 4 கப் தண்ணீரை சேர்த்து உங்களது செம்பருத்தி செடியில் ஊற்றி கொள்ளுங்கள். இதனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் செம்பருத்தி செடி அதிக பூக்கள் பூக்க ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.
1 கிளாஸ் இந்த தண்ணீரை ஊற்றுங்க நீண்ட நாட்களாக காய்க்காத தக்காளி செடியும் கொத்து கொத்தாக காய்க்கும்
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |