பூக்கவே பூக்காத செம்பருத்தி செடியும் பூத்து குலுங்க 1 துண்டு இஞ்சி போதும்..!

Advertisement

Sembaruthi Plant Grow Faster in Tamil

பொதுவாக மலர்கள் என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மிக மிக அதிகமாக பிடிக்கும். ஏனென்றால் மலர்களை பார்க்கும் பொழுது அவற்றின் வண்ணம் மற்றும் அவற்றின் அழகினை பார்த்து ரசித்து கொண்டே இருந்தால் நமது மனதில் உள்ள அனைத்து கஷ்டங்களும் சிறிதுநேரம் நமது மனதில் இருந்து நீங்கிவிடும். அதிலும் ஒரு சில மலர்கள் நமது மனம் மற்றும் உடலின் ஆரோக்கியத்திற்கும் உதவும். அப்படிப்பட்ட மலர்களில் ஒன்று தான் இந்த செம்பருத்தி பூக்களும். இவற்றை பொதுவாக அனைவருமே தங்களது வீடுகளில் வைத்து வளர்ப்பார்கள் என்றால் செம்பருத்தி செடியில் இருந்து நமக்கு பல வகையான நல்ல பலன்கள் கிடைக்கிறது. ஆனால் நமது வீடுகளில் உள்ள செம்பருத்தி செடி அதிக அளவு பூக்கள் பூக்கவில்லை என்றால் அது நமக்கு வருத்தத்தை அளிக்கும். அதனால் இன்றைய பதிவில் நமது வீடுகளில் உள்ள செம்பருத்தி செடியில் அதிக பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..  

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

செம்பருத்தி செடி வளர்ப்பு:

செம்பருத்தி

முதலில் ஒரு செடி நன்கு வளர வேண்டும் என்றால் அதற்கு நன்கு சூரிய ஒளி கிடைக்க வேண்டும். எனவே தான் நாம் நமது செம்பருத்தி செடியினை நன்கு சூரிய ஒளி படும் இடத்தில் நடவு செய்யவேண்டும்.

இப்பொழுது அதற்கு என்ன உரம் அளித்தால் அது நன்கு செழித்து வளர்ந்து அதிக அளவு பூக்கள் பூக்கும் என்பதை பற்றி இங்கு காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. இஞ்சி – 1 துண்டு 
  2. பூண்டு – 10 பற்கள் 
  3. பட்டை – 1
  4. பெருங்காயத்தூள் – 1 டேபிள் ஸ்பூன் 
  5. தண்ணீர் – தேவையான அளவு
  6. ஸ்ப்ரே பாட்டில் – 1

ஒரே ஒரு வாழைக்காய் போதும் பூக்காத மல்லிகை செடியும் கிலோக்கணக்கில் பூத்து குலுங்கும்

செய்முறை:

இஞ்சி

முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 துண்டு இஞ்சி, 10 பற்கள் பூண்டு மற்றும் 1 பட்டை ஆகியவற்றை சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து நன்கு வடிகட்டி கொள்ளுங்கள். பிறகு நாம் வடிகட்டி வைத்துள்ள தண்ணீருடன் 1 டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் 10 மடங்கு தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

காய்ந்த ரோஜா செடியும் 5 நாட்களில் துளிர்விட்டு பூக்கள் பூத்து குலுங்க வாழைப்பழம் மட்டும் போதும்

பயன்படுத்தும் முறை:

பிறகு நாம் கலந்து வைத்துள்ள கலவையை 1 ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து உங்கள் வீட்டில் உள்ள செம்பருத்தி செடியின் வேர் மற்றும் நுனி பகுதிகளில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.

இதனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் செம்பருத்தி செடியில் அதிக பூக்கள் பூக்க தொடங்குவதை நீங்களே காணலாம்.

இந்த தண்ணீர் போதும் மல்லிகை செடியில் மொட்டுக்கள் குறையவே குறையாது

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement