செம்பருத்தி செடி வளர்ப்பு
இன்றைய நவீன காலத்தில் நிறைய வகையான பூக்கள் மாடித்தோட்டத்திலும் மற்றும் இயற்கை விவசாய முறையிலும் வளர்த்து வருகின்றனர். ரோஜா, மல்லிகை, செம்பருத்தி, சாமந்தி மற்றும் முல்லை என நிறைய வளர்த்து வருகிறார்கள். வீட்டில் பூச்செடிகள் இருந்தால் தான் அழகு என்பதனை உணர்ந்து பலவகையான செடிகளை வளர்க்கின்றனர். அதிலும் குறிப்பாக செம்பருத்தி செடி’அழகுக்கு மட்டும் அல்லாமல் மருத்துவகுணம் வாய்ந்ததாகவும் இருக்கும் செம்பருத்தி செடிகளை பூச்சிகள் தாக்குவதால் அவற்றை சரியாக பராமரித்து செடியில் நிறைய பூக்கள் பூக்க வைப்பது என்பது மிகவும் கடினகமாக இருக்கும். அதற்காக தான் இதுநாள் வரையிலும் நீங்கள் கஷ்டப்பட்டு வளர்த்து வந்த செம்பருத்தி பூ செடியினை மிகவும் எளிய முறையில் பராமரித்து நிறைய பூக்கள் பூத்து குலுங்க என்ன செய்வது என்று தெரிந்துக்கொள்ள போகிறோம் வாருங்கள்.
செம்பருத்தி செடியில் அதிக பூ பூக்க:
செடிகள் தேர்வு:
செம்பருத்தி பூக்கள்பல்வேறு நிறங்களிலும் தோற்றங்களிலும் வருகிறது, ஆனால் செம்பருத்தி செடியின் தோற்றத்தைத் தேர்ந்தெடுப்பதை விட முக்கியமானது, உள்ளூர் சூழலில் செழித்து வளரும் ஒன்றை நீங்கள் உங்கள் வீட்டில் நட்டால் அது சரியான வளர்ச்சியை தரக்கூடியதாக இருக்கும்.
அதை போல் நீங்கள் தேர்தெடுப்பது செடி வகையா அல்லது புதர்வகையா என்பதை அறிந்து அதனை நடவு செய்ய வேண்டும்.
வெப்பநிலை :
செம்பருத்தி செடிக்கு வெப்பம் தேவை என்பதால் அதனை குளிர்காலத்தில் நடவு செய்யக்கூடாது.
வெறும் 3 நாட்களில் காய்ந்த ஜாதி மல்லி செடியிலும் பூக்கள் பூத்து குலுங்க பீட்ரூட் மட்டும் போதும்
ரொம்ப இலங்க 7 நாட்களில் ரோஜா செடியில் பூக்கள் தாறுமாறாக பூத்து குலுங்க இதை ட்ரை பண்ணுங்க
நிலம்:
நீங்கள் செம்பருத்தி செடியை நடவு செய்ய சரியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
அதாவது செம்பருத்தி செடிகளுக்கு போதிய அளவு சூரிய ஒளி தேவையென்பதால் ஒரு நாளைக்கு 4 முதல் 6 மணி நேரம் சூரிய ஒளி இருக்க கூடிய இடத்தில் நீங்கள் செம்பருத்தி செடியை நடவு செய்வது நல்லது.
இந்த செடிகள் படர்ந்து வளர கூடியதாகவும் 40 ஆண்டுகள் வரை நிலைத்து இருக்க கூடியதாகவும் இருப்பதால் அதற்கு ஏற்றவாறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் தேர்தெடுக்கும் இடம் மணல் பரப்பாக இல்லாமல் இருப்பது நல்லது.
மண்:
நீங்கள் நடவு செய்யும் மண்ணின் PH 6.5 க்கு மேல் இருந்தால் உங்கள் செடியின் வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும்.
உங்கள் மண்ணின் ph மதிப்பு குறைவாக இருந்தால் உங்கள் மண்ணிற்கு உரமாக குறைந்தளவு பாஸ்பரஸ் அதிகஅளவு பொட்டாசியம் கலந்த கலவையை, நீங்கள் நடவு செய்வதற்கு ஒருவாரத்திற்கு முன் நீங்கள் உங்கள் மண்ணிற்கு உரமாக கொடுக்கலாம்.
இதன் மூலம் மண்ணின் அமில தன்மை அதிகரிக்கும்.
நடவு செய்யும் முறை:
இப்போது உங்கள் செடியை நீங்கள் நடலாம். குறைந்தது 5cm ஆழம் நடலாம்.
செம்பருத்தி செடிகளை நட்ட பிறகு அதன் அடி பகுதியில் மண்ணால் மூட வேண்டும். பிறகு போதுமான அளவு தண்ணீர் ஈட வேண்டும்.
தண்ணீர்:
உங்கள் செடிகள் அதிக ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அடிக்கடி தண்ணீர் கொடுக்காமல் தேவைப்படும் போது, அதாவது மண் வறண்ட நிலையை அடையும் போது தண்ணீர் கொடுத்தல் போதுமானது.
உரம்:
செம்பருத்தி செடிகளை தாக்கும் பூச்சிகளுக்கு கரிம உரங்கள் போதுமானது.
செடிகள் அதிகம் பூ பூக்க செடி கிளைகளை கத்தரிப்பது நல்லது. அதனால் செடிகள் அடர்ந்து வளரும். அதிக கிளைகள் உருவாகும். அதனால் பூக்கள் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
வளர்ச்சி:
செடிகளில் முதல் பூ பூக்க 4 மாதங்கள் தேவைப்படும். ஆனால் அடுத்த அடுத்த பூக்கள் தொடர்ச்சியாக பூக்க ஆரம்பித்துவிடும்.
மண்ணே இல்லாமல், 5 நாளில் கொத்தமல்லியை உங்க வீட்டிலேயே வளர்க்கலாம் ..
ஒரே ரோஜா செடியில் நிறைய பூக்கள் பூக்க என்ன பண்ணனும் தெரியுமா…
புதிதாக நட்ட ரோஜா செடிகள் சீக்கிரம் துளிர்விட இத பண்ணலாமா…
7 நாட்கள் போதும் உங்கள் வீட்டு தோட்டத்தில் பசுமையான வெந்தய கீரை துளிர்விட…
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |