5 நாட்களில் செம்பருத்தி செடியிலிருந்து அதிக பூக்கள் பூப்பதற்கு இதை மட்டும் செய்யுங்க..

Advertisement

Sembaruthi Sedi Valarpathu Eppadi

இன்றைய கால கட்டத்தில் அனைவருமே தாவரங்கள் வளர்ப்பதில் அதிக  ஆர்வம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பூச்செடிகள் வளர்பதில் அதிக அளவு ஆர்வம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக அனைவரின் வீட்டிலேயும் செம்பருத்தி பூச்செடி வளர்ப்பதில் ஆர்வம் இருக்கும். அப்படி செம்பருத்தி பூச்செடிகள் வளர்ப்பவர்கள் அனைவருமே கூறுவது நான் எனது செடிகளை நன்றாக தான் பராமரித்து கொள்கின்றேன். ஆனால் எனது செம்பருத்தி பூச்செடிகளில் அதிக அளவு பூக்களே பூக்கவில்லை என்பது தான். அப்படி கவலைப்படுபவர்களுக்காக தான் இன்றைய பதிவில் செம்பருத்தி பூச்செடிகளில் அதிக அளவு பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

நட்டு வைத்த 7 நாட்களில் ரோஜா செடியில் பூக்கள் பூக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

செம்பருத்தி செடி வளர்க்கும் முறை:

Sembaruthi chedi valarpu murai

நாம் அனைவரின் வீட்டிலேயும் ஒரு சிறிய அளவிலான தோட்டம் அல்லது மாடித்தோட்டம் கண்டிப்பாக இருக்கும். அப்படி உள்ள தோட்டத்தில் கண்டிப்பாக இடம்பெற்றுள்ள பூச்செடி என்றால் அது செம்பருத்தி செடி தான்.

ஏனென்றால் இந்த செம்பருத்தி பூச்செடியால் நமக்கு பலவகையான நன்மைகள் கிடைக்கிறது. மேலும் தெய்விக சக்தி நிறைந்துள்ள செடிகளில் இதுவும் ஒன்று.

அப்படி நாம் விரும்பி வளர்க்கும் செம்பருத்தி செடியை நாசமாக்கும் மாவு பூச்சிகளை போக்க உதவும் டிப்ஸினை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க..

டிப்ஸிற்கு தேவைப்படும் பொருட்கள்:

  1. மைதா மாவு – 5 டேபிள் ஸ்பூன் 
  2. பெருங்காய தூள் – 2 டேபிள் ஸ்பூன் 
  3. துளசி சோப்பு – 1/2
  4. தண்ணீர் – 7 கிளாஸ்
  5. ஸ்ப்ரே பாட்டில் – 1

5 நாட்களில் ரோஜா செடியிலிருந்து அதிக பூக்கள் பூப்பதற்கு இதை மட்டும் செய்யுங்க

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 5 கிளாஸ் தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 5 டேபிள் ஸ்பூன் மைதா மாவினை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

அடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் பெருங்காய தூளினை சேர்த்து கொதிக்க விடுங்கள். அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 துளசி சோப்பினை பொடி பொடியாக செய்து சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

பிறகு அதனை அடுப்பில் இருந்து இறக்கி அதில் 2 கிளாஸ் தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

பிறகு இதனை 1 ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி உங்கள் வீட்டில் உள்ள செம்பருத்தி செடியின் துளிர்கள் மற்றும் மொட்டுகளின் மீது ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் செடியில் அதிக அளவு பூக்கள் பூக்கும்.

ஒரே ரோஜா செடியில் நிறைய பூக்கள் பூக்க என்ன பண்ணனும் தெரியுமா…

3 நாட்களில் செம்பருத்தி செடி துளிர்விட்டு மொட்டுகள் வைக்க இதை ட்ரை பண்ணுங்க

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement