செம்பருத்தி செடி வளர்க்கலாமா.!
வீட்டில் பூச்செடிகளை வளர்ப்பது பெரும்பாலானவர்களுக்கு பிடித்த ஒன்றாக இருக்கிறது. வீட்டில் பூச்செடிகள் இருந்தாலே வீடு அழகாக இருக்கும். இதனால் பூச்செடிகளை வளர்க்கின்றனர். பலரது வீட்டில் எந்த செடி இருக்கிறதோ இல்லையோ செம்பருத்தி செடியை வளர்ப்பார்கள். சில பேர் வாசல் முன்புறத்தில் வளர்ப்பார்கள், சில பேர் பின்புறத்தில் வளர்ப்பார்கள். சில பேர் எல்லாருடைய வீட்டிலும் இருக்கிறதே நாமும் வளர்ப்போம் என்று செம்பருத்தி செடியை வாங்கி வந்து வைப்பார்கள். ஆனால் அந்த செடியிலிருந்து பூக்கள் பூக்கவே பூத்திருக்காது. அதனால் தான் இந்த பதிவில் செம்பருத்தி பூச்செடியில் பூக்கள் தாறுமாறாக பூப்பதற்கு உரத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
செம்பருத்தி செடியில் அதிக பூக்கள் பூக்க உரம்:
செம்பருத்தி செடியில் அதிக பூக்கள் பூப்பதற்கு ஊட்டச்சத்து உள்ள உரங்களை கொடுக்க வேண்டும். இதற்கு நீங்கள் சிட்ரஸ் நிறைந்த பழங்களை கொடுக்க வேண்டும். அப்போது செடியில் பூக்கள் அதிகமாக பூக்கும்.

முதலில் சிட்ரஸ் நிறைந்த பழங்களாக இருப்பது ஆரஞ்சு, எலுமிச்சை பழம், சாத்துக்குடி போன்ற பழங்களில் சிட்ரஸ் நிறைந்துள்ளது.
இந்த மூன்று பழமும் வேண்டும் என்று நினைக்காதீர்கள், ஏதவாது ஒன்று இருந்தாலே போதுமானது.
பச்சை மிளகாய் செடியில் கூடை கூடையாய் காய்கள் காய்க்க இதை மட்டும் ஊத்துங்க..
மூன்று பழங்களில் ஏதவாது ஒன்றின் பழத்தை தோலை மட்டும் எடுத்து கொள்ளவும். இதனை தண்ணீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு அப்படியே ஊற வேண்டும். அந்த இரண்டு நாட்களும் இந்த தண்ணீரை கலந்து விட வேண்டும்.
இரண்டு நாட்கள் கழித்து இந்த தண்ணீரில் தண்ணீர் இரண்டு மடங்கு ஊற்றி கொள்ள வேண்டும். இதனை செம்பருத்தி செடியின் வேர் பகுதியில் ஊற்ற வேண்டும்.
இந்த உரத்தை வாரத்தில் ஒரு நாள் ஊற்றுவதன் மூலம் செம்பருத்தி செடியில் அதிக பூக்கள் பூத்துகுலுங்கும்.
இது போல் பழத்தின் தோல்களை ஊற வைப்பதன் மூலம் அதில் நுண்ணுயிர் சத்துக்கள் அதிகமாக இருக்கும். இந்த சத்துக்கள் செடிகள் ஆரோக்கியமாக வளருவதற்கு உதவுகிறது.
| இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |














