செம்பருத்தி செடியிலிருந்து பூக்கள் பூக்க
பெரும்பாலானவர்களின் வீட்டில் காய்கறி செடிகளை வளர்க்கிறார்களோ இல்லையோ பூச்செடிகளை வளர்க்கிறார்கள். பூச்செடிகளை வளர்த்தால் வீடு அழகாக காட்சியளிக்கும். அதில் ஒன்றான செம்பருத்தி செடியை பலரும் வளர்க்கிறார்கள். இதற்கு பராமரிப்பு அவ்வளவாக தேவையில்லை என்றாலும் சில நேரங்களில் செம்பருத்தி செடியிலிருந்து மொட்டுக்கள் உதிர ஆரம்பித்து பூக்கள் பூக்காமல் போய் விடுகிறது. இதனை தடுப்பதற்கு காசு கொடுத்து செலவு செய்யாமல் வீட்டில் உள்ள பொருளை பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
செம்பருத்தி செடியில் அதிக பூக்கள் பூக்க டிப்ஸ்:
செம்பருத்தி செடி நன்றாக வளர்த்து பூக்கள் பூக்க வேண்டும் என்றால் அதற்கு உயிர்ச்சத்து முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதனால் செம்பருத்தி செடியில் உயிர்சத்தை அதிகப்படுத்த இட்லி மாவு மட்டும் போதும்.
இதற்காக நீங்கள் அரைத்த மாவை பயன்படுத்த கூடாது. புளித்த மாவை தான் பயன்படுத்த வேண்டும். மாவு எந்த அளவிற்கு புளித்திருக்கிறதோ அந்த அளவிற்கு அதில் பாக்ட்ரியாக்கள் உருவாகியிருக்கும்.
சின்ன செம்பருத்தி பூ செடியிலும் பூக்கள் நிறைய பூத்து குலுங்க வெந்தயம் போதும்
புளித்த மாவை தண்ணீரில் கட்டி இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும். முக்கியமாக மாவு கம்மியாக தான் இருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு கரண்டி மாவு எடுத்தால் 5 கரண்டி தண்ணீர் எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
இந்த தண்ணீரை ஊற்றும் போது செடிகளுக்கு தேவையான உயிர்சத்துக்கள் கிடைக்கும். இந்த உரத்தில் நீங்கள் மாவை அதிகமாக சேர்த்து தண்ணீர் குறைந்து ஊற்றினால் செடிகளில் பூச்சி வந்துஅழுகி போகிவிடும்.
இந்த உரத்தை வாரத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும். இந்த உரத்தை ஊற்றும் போது செடிகளின் வேர் பகுதியை நன்றாக கிளறி விட்டு பிறகு ஊற்ற வேண்டும்.
இந்த உரத்தை செம்பருத்தி செடிக்கு மட்டுமில்லை வீட்டில் உள்ள எல்லா செடிகளுக்கும் உரமாக வாரத்தில் இரு நாள் கொடுக்கலாம்.
மண்ணே இல்லாமல், 5 நாளில் கொத்தமல்லியை உங்க வீட்டிலேயே வளர்க்கலாம் ..
ஒரே ரோஜா செடியில் நிறைய பூக்கள் பூக்க என்ன பண்ணனும் தெரியுமா…
வைத்த 5 நாட்களிலே ரோஜா செடி துளிர்விட்டு மொட்டுகள் வைக்க இதை try பண்ணுங்க
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |