செம்பருத்தி செடியில் அதிக பூக்கள் இதை மட்டும் உரமாக கொடுங்க..

Advertisement

செம்பருத்தி செடியில் அதிக பூக்கள் பூக்க

பெண்களுக்கு பூ என்றால் அவ்வளவு பிடிக்கும். அதனாலயே வீட்டில் ஏதவாது ஒரு பூச்செடி வளர்ப்பார்கள். அதிலும் அதிகமாக வளர்க்க கூடிய செடியாக ரோஜா, மல்லி, செம்பருத்தி செடி இருக்கிறது. வீட்டிலையே பூச்செடி வளர்ப்பதால் தினமும் தலைக்கு பூ வைத்து கொள்ளலாம், அதுமட்டுமில்லாமல் சாமிக்கும் வைப்பதற்கு உதவியாக இருக்கிறது. இருந்தாலும் சில பேர் வீட்டில் வைத்த உடனே செடி அதிகமாக பூ பூத்து விடுகிறது. சிலர் வீட்டில் செடிகள் வளரும், ஆனால் அதிலிருந்து பூக்கள் பூக்காமல் இருக்கும். அதனால் தான் இந்த பதிவில் செம்பருத்தி செடியில் அதிக பூக்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

செம்பருத்தி செடியில் அதிக பூக்கள் பூக்க உரம்:

செம்பருத்தி செடியில் அதிக பூக்கள் பூக்க

கடலை பிண்ணாக்கு ஒரு கைப்பிடி, எரு ஒரு கைப்பிடி எடுத்து இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த உரத்தை செம்பருத்தி செடியில் நன்றாக ஒரு அடி ஆழத்திற்கு நோண்டி கொள்ளவும். அதன் உள்ளே கலந்து வைத்த உரத்தை போட்டு கிண்டி விடவும்.  இந்த உரத்தை மாதத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்.

அடுத்து காய்கறி கழுவிகளை கொடுக்கலாம்.

காய்ந்த ரோஜா செடி கூட துளிர் விட்டு பூக்கள் பூக்க இதை மட்டும் ஊற்றினால் போதும்..

காய்ந்த செடிகளை நறுக்க வேண்டும்:

செம்பருத்தி செடியில் காய்ந்தது ஏதும் இருந்தால் அவற்றை நீக்க வேண்டும். மேலும் பழுத்த இலைகள் இருந்தாலும் அவற்றையும் நீக்கி விடவும்.

ஏனென்றால் செடிகளுக்கு சத்து சேர்ந்து பூக்கள் அதிகமாக பூப்பதற்கு உதவியாக இருக்கும்.

பூச்சிகள் தாக்காமல் இருக்க:

செம்பருத்தி செடியில் அதிக பூக்கள் பூக்க

செடிகளில் பூச்சிகள் தாக்காமல் இருக்க தண்ணீரை முழுவதும் ஸ்பிரே செய்ய வேண்டும். அடுத்து வேப்பிலை இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி கொள்ள்வும். இந்த தண்ணீரை செடி முழுவதும் ஸ்பிரே செய்வதால் பூச்சிகள் வராமல் இருக்கும்.

மொட்டுகள் உதிராமல் இருக்க:

மொட்டுகள் உதிராமல் இருப்பதற்கு செடியில் தண்ணீர் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் செடியில் தண்ணீர் ஊற்றும் போது அதில் தண்ணீர் தேங்கி அழுகி மொட்டுகள் உதிரும்.

முல்லை பூச்செடியில் பூக்கள் பூத்து குலுங்க இதை மட்டும் ஊற்றினால் போதும்..

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement