செம்பருத்தி செடியில் உள்ள மாவு பூச்சினை போக்க மைதா மாவு போதும்..!

Sembaruthi Sediyil Irukka Maavu Poochi Neenga Tips in Tamil

Sembaruthi Sediyil Irukka Maavu Poochi Neenga Tips in Tamil

நம்முடன் இந்த உலகில் சேர்ந்து வாழ்கின்ற மற்ற உயிரினங்களையும் நமது மனம் மிகவும் விரும்பும். அப்படி தான் நமது மனமானது தாவரங்கள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. அப்படி நமது மனமானது மிகவு விரும்பி வளர்க்கும் செடிகளில் ஒன்று தான் இந்த செம்பருத்தி செடியும் ஒன்று. ஏனென்றால் இந்த செம்பருத்தி பூவினால் நமக்கு பலவகையான நன்மைகள் கிடைக்கிறது. அப்படி நாம் விரும்பி வளர்க்கும் செம்பருத்தி செடியில் தீடிரென்று மாவு பூச்சி பிரச்சனைகள் ஏற்பட்டு செடியே முற்றிலும் நாசமாகிவிடும். எனவே தான் இன்றைய பதிவில் செம்பருத்தி செடியில் உள்ள மாவு பூச்சினை போக்கி செடி அதிக பூக்கள் பூக்க வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க.

நெல் வயலில் உள்ள களைகளை போக்க வேப்ப எண்ணெய் போதும்

Sembaruthi Sedi Arokiyamaga Valara Tips in Tamil:

செம்பருத்தி செடியில் பூச்சி

நாம் அனைவரின் வீட்டிலேயும் ஒரு சிறிய அளவிலான தோட்டம் அல்லது மாடித்தோட்டம் கண்டிப்பாக இருக்கும். அப்படி உள்ள தோட்டத்தில் கண்டிப்பாக இடம்பெற்றுள்ள பூச்செடி என்றால் அது செம்பருத்தி செடி தான்.

ஏனென்றால் இந்த செம்பருத்தி பூச்செடியால் நமக்கு பலவகையான நன்மைகள் கிடைக்கிறது. மேலும் தெய்விக சக்தி நிறைந்துள்ள செடிகளில் இதுவும் ஒன்று.

அப்படி நாம் விரும்பி வளர்க்கும் செம்பருத்தி செடியை நாசமாக்கும் மாவு பூச்சிகளை போக்க உதவும் டிப்ஸினை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க..

டிப்ஸிற்கு தேவைப்படும் பொருட்கள்:

  1. மைதா மாவு – 5 டேபிள் ஸ்பூன் 
  2. பெருங்காய தூள் – 2 டேபிள் ஸ்பூன் 
  3. துளசி சோப்பு – 1/2
  4. தண்ணீர் – 7 கிளாஸ்
  5. ஸ்ப்ரே பாட்டில் – 1

நெல் வயலில் எலி தொல்லை நீங்க வறுத்த கடலையை இப்படி செய்து வைத்தாலே போதும்

கடாயை எடுத்து கொள்ளவும்:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 5 கிளாஸ் தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 5 டேபிள் ஸ்பூன் மைதா மாவினை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

பெருங்காய தூளினை சேர்க்கவும்:

அடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் பெருங்காய தூளினை சேர்த்து கொதிக்க விடுங்கள்.

பூக்காத சாமந்தி பூச்செடியையும் கிலோ கணக்கில் பூக்க வைப்பதற்கு இந்த ஒரு பொடி போதும்

துளசி சோப்பினை சேர்த்து கொள்ளவும்:

அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 துளசி சோப்பினை பொடி பொடியாக செய்து சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பிறகு அதனை அடுப்பில் இருந்து இறக்கி அதில் 2 கிளாஸ் தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பிறகு இதனை 1 ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி உங்கள் வீட்டில் உள்ள செம்பருத்தி செடியில் உள்ள மாவு பூச்சிகளின் மீது ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் செடியில் உள்ள அனைத்து மாவு பூச்சிகளும் நீங்கி செடியில் அதிக அளவு பூக்கள் பூக்கும்.

பூக்காத மல்லிகை பூ செடியிலும் பூக்க வைப்பதற்கு வெந்தயம் மட்டும் போதும்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம்