சின்ன செம்பருத்தி பூ செடியிலும் பூக்கள் நிறைய பூத்து குலுங்க வெந்தயம் போதும்..!

Advertisement

செம்பருத்தி பூ பூக்க என்ன செய்ய வேண்டும்

பூக்களில் நிறைய வகைகள் இருப்பதனால் இதனை நாம் எல்லா வகையிலான மண்களிலும் நட முடியாது. ஆனால் செம்பருத்தி பூ செடி மட்டும் பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த செடி விரைவில் வளர்ந்தாலும் கூட பூக்கள் பூக்காமல் இருப்பதே ஒரு பெரும் பிரச்சனையாக மாறுகிறது. நாமும் பூக்கள் பூக்காத செடியை என்ன செய்ய முடியும் என்று யோசித்து விட்டு அப்படியே விட்டு விடுவோம். ஆனால் இனி நீங்கள் இவற்றை நினைத்து கவலை பட வேண்டாம். ஏனென்றால் இன்று சின்ன செமபருத்தி பூ செடியிலும் பூக்கள் பூத்து குலுங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். ஆகையால் பதிவை தொடர்ந்து படித்து பூக்களை பூக்க வைக்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Sembaruthi Chedi Valarpu Murai:

 sembaruthi chedi valarpu murai

செம்பருத்தி பூ செடியினை நீங்கள் நடவு செய்த பிறகு அதற்கு சரியான முறையில் தண்ணீர் விட்டு பராமரித்து வர வேண்டும். அதன் பிறகு அந்த செடியில் பூச்சிகள் எதுவும் தாக்காமல் இருக்க வெந்தய பொடியினை அதற்கு உரமாக கொடுப்பது நல்லது.

ஏனென்றால் வெந்தயத்தில் உள்ள சத்துக்கள் ஆனது செடிக்கு தேவையான ஊட்டச்சத்தினை வழங்கும்.

வைத்த 5 நாட்களிலே ரோஜா செடி துளிர்விட்டு மொட்டுகள் வைக்க இதை try பண்ணுங்க 

பூக்கள் அதிகம் பூக்க:

செடியில் பூக்கள் அதிகாமாக பூக்க முதலில் வெந்தயக்கீரையினை வாங்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த கீரையினை 2 அல்லது 3 நாட்கள் வரை வெயிலில் காய வைத்து விட வேண்டும்.

செம்பருத்தி பூ பூக்க என்ன செய்ய வேண்டும்

இந்த கீரை நன்றாக காய்ந்த பிறகு அதில் உள்ள காம்பினை எல்லாம் நீக்கி விட்டு ஒரு 50 கிராமை எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது அந்த கீரையில் 2 டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 1 நாள் முழுவது ஊற வைத்து விடுங்கள்.

மறுநாள் காலையில் இந்த தண்ணீரில் இருக்கும் சக்கையினை வெளியேற்றி விட்டு தண்ணீரை மட்டும் செடிகளுக்கு உரமாக கொடுத்து வந்தாலே போதும் பூக்காத செம்பருத்தி பூ செடியில் பூக்கள் பூத்து குலுங்க ஆரம்பிக்கும்.

வாரத்தில் ஒரு நாள் இந்த தண்ணீரை ஊற்றினால் போதும் செம்பருத்தி செடியில் பூக்கள் பூத்து குலுங்கும்..

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement