அதிக பூக்களுக்கு
பெண்களுக்கு என்ன தான் பல பூக்கள் பிடித்து இருந்தாலும் கூட வீட்டில் செம்பருத்தி செடி வளர்ப்பு மீது ஒரு தனி ஆசை மற்றும் ஆர்வமானது காணப்படும். அதிலும் குறிப்பாக மற்ற பூக்களை ஒப்பிட்டு பார்க்கும் போது செம்பருத்தி பூவில் மட்டும் எண்ணற்ற வகைகள் இருக்கிறது. அதாவது ஒத்த செம்பருத்தி, அடுக்கு செம்பருத்தி மற்றும் நிறங்கள் என பல வகைகள் இருக்கிறது. இதில் எப்படி இவ்வளவு வகைகள் இருக்கிறதோ அதே போல இதனை சரியான முறையில் பராமரிப்பதிலும் நிறைய வகைகள் அல்லது மாற்றங்கள் உள்ளது. ஆகவே இன்றைய பதிவில் செம்பருத்தி பூவில் ஒன்றான அடுக்கு செம்பருத்தி பூச்செடியினை துளிர் விட செய்து, அதிகம் பூக்கள் பூக்க என்ன செய்யலாம் என்பதையும் தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
செம்பருத்தி செடியில் அதிக பூக்கள் பூக்க என்ன செய்யலாம்.
நாம் அனைவரின் வீட்டிலும் கண்டிப்பாக இருக்கும் பூச்செடிகளில் ஒன்றாக செம்பருத்தி செடி இருக்கும்.
ஏனென்றால் இந்த செம்பருத்தி பூச்செடி ஆன்மிக மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியதாக உள்ளது. செம்பருத்தி செடியினை தெய்வ சக்தி நிறைந்த செடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
அப்படி நாம் விரும்பி வளர்க்கும் செம்பருத்தி செடியில் பூக்கள் பூக்காமல் செடிகளை நாசமாக்கும் பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
இயற்கையான பூச்சிக்கொல்லி தயாரிக்கும் முறை:
தேவைப்படும் பொருட்கள்:
- பெருங்காய தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- துளசி சாறு – 1/2 கப்
- தண்ணீர் – 7 கிளாஸ்
- வேப்பிலை சாறு – 1/2 கப்
செய்முறை:
முதலில் தண்ணீருடன் பெருங்காய தூள் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். பின்னர் ஆறவிட்டு அதனுடன் வேப்பிலை மற்றும் துளசி சாறுகளை சேர்த்துக்கொள்ளவும்.
பிறகு இந்த சாற்றை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி உங்கள் வீட்டில் உள்ள செம்பருத்தி செடியில் உள்ள மாவு பூச்சிகளின் மீது ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இதனை மாவு பூச்சிகள் தாக்கும் அனைத்திற்கும் பயன்படுத்தலாம்.
இதன் மூலம் பூக்களில் பூச்சிகள் தொல்லை நீங்கி பூக்கள் அதிக அளவில் பூக்க ஆரம்பித்துவிடும்.
உங்கள் வயலை புகையான் பாதிப்பில் இருந்து பாதுகாக்க….இதை ட்ரை பண்ணுக…
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |