சேப்பங்கிழங்கு பயிரிடப்பட ஏற்ற காலம்
இன்றைய பதிவில் சேப்பங்கிழங்கு சாகுபடி செய்வது எப்படி என்பதை பார்க்க போகிறோம் . சேப்பங்கிழங்கில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சேப்பங்கிழங்கில் சாகுபடி பொறுத்தவரை மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. மேலும் நல்ல இலாபத்தை அள்ளி தரக்கூடிய ஒரு சிறந்த பயிராக விளங்குகிறது. இந்தசேப்பங்கிழங்கில் சாகுபடி பொறுத்தவரை சரியான நல்ல இரகங்கள் மற்றும் நிலம் தயாரிப்பு முறைகள் மிகவும் முக்கியம். சரி இப்போது நமது பொதுநலம் பகுதியில் சேப்பங்கிழங்கில் சாகுபடி முறையை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..!
இயற்கை முறையில் சேப்பங் சாகுபடி:
கோ 1, தாரா, அரிப்பு இல்லாத ரகங்கள் மற்றும் சிறிய சேப்பங்கிழங்கு மற்றும் பெரிய சேப்பங்கிழங்கு போன்றவை சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள் ஆகும் .
பருவக்காலம் :
பாசனவசதி இருந்தால் கோடைகாலம் மற்றும் குளிக்கலாம் என எல்லா மாதங்களிலும் நடவு செய்யலாம். இருப்பினும் மானாவாரியில் நவம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதம் சேப்பங்கிழங்கு சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலங்கள் ஆகும்.
சேப்பங்கிழங்கு பயிரிடும் முறை :
- செம்மண், வண்டல் மண் சேப்பங்கிழங்கு சாகுபடி செய்ய ஏற்றது.
- மண்ணில் தழைச்சத்து அதிகம் இருக்கவேண்டும்.
- களிமண்ணில் சேப்பங்கிழங்கு சாகுபடி செய்ய கூடாது.
- அதேபோல் நல்ல காற்றோட்ட வசதியும், தண்ணீர் தேங்காமலும் இருக்கவேண்டும்.
- மேலும் மண்ணின்அமில காரதன்மை, ஊட்ட சத்து இருக்க வேண்டும்.
சேப்பங்கிழங்கு நிலத்தின் தன்மை :
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக உழுது பயன்படுத்த வேண்டும். கடைசி உழவின்போது 25 டன் தொழுஉரம் இட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிட வேண்டும். பிறகு 75 செ.மீ இடைவெளியில் பார் அமைக்க வேண்டும்.
விதையளவு:
சேப்பங்கிழங்கு சாகுபடி பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 500 கிலோ, கிழங்குகள் நடுவதற்கு தேவைப்படும். விதைகளை நடவு செய்வதற்கு முன் 200 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ சூடோமோனாஸ் கலந்து 10 நிமிடம் ஊறவைத்து பிறகு பயிரிட வேண்டும்.
சேப்பங் பயிரிடும் முறை:
ஒவ்வொரு கரணையும் அரை அடி நீளத்துடன் 8-10 கணுக்களுடன் இருப்பது நல்லது. விதைக்கரணைகளை பூசண மருந்துக் கரைசலில் ஊற வைத்து நடவு செய்வதால் நோய் தாக்குதலைத் தடுக்கலாம். மானாவாரி மற்றும் பாசனப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வறட்சியைத் தாங்கும் விதமாக ஊட்டச்சத்துக் கரைசலில் கரணை நேர்த்தி செய்ய வேண்டும்.
நடவு செய்யும் முறை:
பாசன சாகுபடிக்கு இரண்டரை அடி இடைவெளியில் பார்பிடித்து அதே அளவு இடைவெளியில் பாரில் வரிசையாக நடவு செய்ய வேண்டும். வளமான நிலங்களுக்கு 3X3 இடைவெளி போதுமானது. மானாவாரியில் 2X2 இடைவெளிப் பார்கள் அமைத்து நடவு செய்ய வேண்டும்.
சேப்பங்கிழங்கு நீர் பாசனம்:
சேப்பங் கிழங்கு சாகுபடி: நடவு செய்தவுடன் முதல் பாசனமும், அதன் பிறகு மூன்றாவது நாள் உயிர்தண்ணீரும் விடவேண்டும். பிறகு 3 மாதங்கள் வரை 7 முதல் 10 நாள் இடைவெளியில் பாசனம் செய்ய வேண்டும். அதற்கு மேல் 8 வது மாதம் வரை 20 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதுமானது. சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பது மிகச் சிறந்த யுக்தியாகும். இதனால் நீர் சேமிக்கப்படும்.
சேப்பங்கிழங்கு உரம் இடும் முறை :
மரவள்ளி கிழங்கு உரம் இடும் முறை பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 4 கிலோ அசோஸ்பைரில்லம் 40 கிலோ மணலுடன் கலந்து நடவு செய்த 30வது நாளில் இடவேண்டும். தழை, மணி மற்றும் சாம்பல் சத்து, இரும்புசத்து தேவைப்படும்.
மாடித்தோட்டம் உருளை கிழங்கு சாகுபடி மற்றும் பயன்கள் !!!
பாதுகாப்பு முறைகள்:
களை நிர்வாகம்:
நடவு செய்த 20 வது நாள் முதல் களை எடுக்க வேண்டும். அப்போது முளைக்காத கரணைகளுக்கு பதில் புதிய கரணைகளை நடவு செய்ய வேண்டும். பிறகு 3-ம் மாதம் களை எடுத்து மண் அணைக்க வேண்டும்.
செடி நட்டு 60-வது நாளில் செடிக்கு இரண்டு கிளைகளை மட்டும் விட்டுவிட்டு மீதியை அகற்றி விடவேண்டும்.
அறுவடை:
சேப்பங்கிழங்கு சாகுபடி முறையில் இலைகள் மஞ்சள் நிறம் கலந்த பழுப்பு நிறமாகி உதிர ஆரம்பிக்கும். நிலத்தில் வெடிப்புகள் உண்டாகும். இவையே அறுவடைக்கான அறிகுறியாகும்.
மகசூல்:
சேப்பங்கிழங்கு சாகுபடி முறையில் ஓரு ஏக்கருக்கு 08 முதல் 12 டன் கிழங்குகள் வரை கிடைக்கும்.
| இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |














