Sevanthi Poo Chedi Valarpu in Tamil
பொதுவாக பெண்கள் அதிகமாக விரும்பக்கூடிய பொருட்களில் பூக்களும் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் பெரும்பாலும் பெண்கள் வெளியில் செல்லும் போது எல்லாம் பூக்கள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படி பார்க்கையில் பூக்களை பொறுத்தவரை ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு விலை இருக்கும். ஏனென்றால் பூக்களின் மகசூல் எவ்வளவு என்பதை பொறுத்தே விலை ஆனது அமைகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தற்போது உள்ள மாதம் வரை ஜனவரி அதாவது பொங்கல் வரையிலுமே செவ்வந்தி பூக்கள் பூப்பதற்கான சீசனாக உள்ளது. ஆகவே இத்தகைய நேரத்தில் நீங்கள் செவ்வந்தி பூக்களை நல்ல முறையில் பூக்க செய்தாலே மட்டுமே அதனை விற்பனை செய்து நல்ல வருமானம் பெறலாம். அதனால் இன்றைய பதிவில் செவ்வந்தி பூச்செடியில் பூக்கள் அதிகமாக பூக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
செவ்வந்தி பூ செடி வளர்ப்பது எப்படி..?
செவ்வந்தி பூ செடியை நீங்கள் விதைகள் அல்லது செடி மூலமாக வளர்க்கலாம். அதனால் முதலில் நீங்கள் செவ்வந்தி பூ செடியை நடுவதற்கு மண் கலவையை தயார் செய்து கொள்ள வேண்டும்.
அதிலும் குறிப்பாக இந்த செடி மணல் கலந்த வண்டல் மணலில் நன்றாக வளரக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. இவ்வாறு செய்தால் போதும் செடி நன்றாக வளர்ந்து மொட்டுக்கள் வர ஆரம்பிக்கும்.
செவ்வந்தி பூ அதிகம் பூக்க:
- முட்டை ஓடு
- வாழைப்பழத்தோல்
- எப்சம் சால்ட்
மேலே சொல்லப்பட்டுள்ள மூன்று பொருளினையும் சம அளவில் செவ்வந்தி பூ செடிக்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு முட்டை ஓடு மற்றும் வாழைப்பழத்தோலை நன்றாக வெயிலில் காய வைத்து நன்றாக பவுடர் போல அரைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது தண்ணீரில் அரைத்து வைத்துள்ள பவுடர் மற்றும் எப்சம் சால்ட் என இவற்றை எல்லாம் கலந்து கொண்டு அதனை நீரில் கரைக்க வேண்டும். கடைசியாக இந்த தண்ணீரை செவ்வந்தி பூ செடிக்கு ஊற்ற வேண்டும்.
இத்தகைய கரைசலை செவ்வந்தி பூச்செடி நீங்கள் வைத்த 10 நாட்களுக்கு பிறகே அளிக்க வேண்டும்.
மேலும் இந்த கரைசலை அளிப்பதன் மூலம் பூக்கள் அதிகமாக பூப்பதோடு மட்டும் இல்லாமல் பூக்கள் விரியவும் ஆரம்பித்து விடும். அதேபோல் பூக்கள் அதிகமாக செடியில் பூக்கிறது என்றால் அதனை உடனே பறித்து விடுவது நல்லது.
மாதுளை செடியிலேயே காய்கள் காய்க்க வாரம் 1 முறை இதை ட்ரை பண்ணி பாருங்க
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |