வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சோம்பு சாகுபடி செய்யும் முறை

Updated On: November 27, 2025 12:28 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

 Sompu Saagupadi Seium Murai In Tamil

இன்றைய பதிவில்  சோம்பு செடி வளர்ப்பு பற்றி பார்க்க போகிறோம்.  சோம்பு என்பது பண்டைய காலத்தில் இருந்தே ஆரோக்கியம் தரக் கூடிய தாவரமாகும். அன்றாடம் சமையலுக்கு பயன்படும் மசாலா பொருளாக மட்டுமின்றி, அதன் சிறந்த மருத்துவ குணத்திற்கு பெயர்பெற்றது. சோம்பில் இருக்கும் ஆக்சிஜனேற்ற பண்புகள் உடலுக்கு நன்மை அளிக்கும். இதில் பொட்டாசியம், மெக்னீஷியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அந்த வகையில் இன்றைய பதிவில்  சோம்பு செடி வளர்ப்பு என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க…

மண்வளம் :

How to Grow and Care for Fennel in Your Herb Patch | Gardener's Path

சோம்பு அனைத்து வகை மண்களிலும் நன்றாக வளரும். முக்கியமாக சோம்பு விவசாயத்திற்கு ஏற்ற மண் தளர்வானதாகவும், ஆழமானதாவும் மற்றும் நன்கு வடிகால் வசதியுடனும், மட்கிய சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். மட்கிய சத்துக்கொண்ட மணல் கலந்த செம்மண் சோம்பு  சாகுபடிக்கு ஏற்றதாகும்.

விதைகள்:

சமையலுக்கு பயன்படுத்தப்படும் சோம்பு விதைகளை மண்ணில் தூவலாம். அறுவடைக்கு சரியாக விதையை பழுக்க வைப்பதை உறுதி செய்ய வேண்டும். போதுமான வெப்பம் மற்றும் உறைபனி இல்லாத நாட்களை வழங்க சீக்கிரம் விதைகளை விதைக்க தொடங்குங்கள் கேரட் வகையை போலவே, சோம்பும் ஒரு வேர் கொண்டது. கடைசி உறைபனி தேதிக்கு பிறகு வசந்த காலத்தில் துளையிடும் குழிகளில் சோம்பை நேரடியாக விதைக்கவும்.6 -8 அங்குலம் இடைவெளியிலும் வரிசைகளுக்கு இடையில் 1.5 அடி மெல்லிய நாற்றுகளாக இருந்தால் தாவரங்கள் நன்கு வளரும் வரை அந்த பகுதியை நீர்ப்பாசனம் செய்து களைகள் இல்லாமல் கொத்தி விடவும். 

நீர்ப்பாசனம் :

முதல் நீர்ப்பாசனம் விதைகளை விதைத்த உடனே மேற்கொள்ள வேண்டும். தேவைக்கேற்ப அடுத்த நீர்ப்பாசனம் அளிக்கப்படுகிறது. 

மேலும் கோடைகாலத்தில் 4முதல் 5 நாட்களுக்கு ஒரு முறையும்.குளிர்காலத்தில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்வது பயிருக்கு போதுமான நீர்ப்பாசன வசதியை அளிக்கிறது. மழைக்காலத்தில் தேவைப்படும்போது மட்டுமே நீர்ப்பாசன வசதி தேவைப்படுகிறது.

களை நிர்வாகம்:

சோம்பு  விவசாயம் பொறுத்தவரை களைகள் வளர்வதைப் பொறுத்து விதைத்த 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். இதை இயந்திரம் மூலமாகவும்,கைமுறை மூலமாகவும் களைகளை நிர்வாகம் செய்யலாம்.

கத்தரித்தல்:

சோம்பு அதன் வடிவத்தை பராமரிக்க அதன் வளர்ச்சியை ஊக்குவிக்க வழக்கமான கத்தரித்தல் தேவையில்லை. வளரும் பருவத்தின் முடிவில் விதை தலைகளை தரை மட்டத்திற்கு வெட்டி அறுவடை செய்யுங்கள். இது தாவரங்கள் தானாக விதைப்பதை தடுக்கும்.

மாடித்திட்டத்தில் செங்காந்தள் செடி வளர்ப்பது எப்படி ?

அறுவடை:

சோம்பு முதிர்ச்சியை அடையவும் விதைகள் அறுவடை மற்றும் சேமிப்பிற்கு  தயாராக இருக்கும் 120 நாட்கள் உரைப்பணி இல்லாத வானிலை தேவைப்படுகிறது.  சோம்பு செடி அழகாக வெள்ளை பூக்களை வளர்க்க தொடங்கும் போது இலைகளை அறுவடை செய்யலாம். இளம் செடியில் இலைகளை அறுவடை செய்து அதன் வளர்ச்சியை தடுக்கலாம். விதை உற்பத்தி அறுவடைக்கு தயாராக இருக்கும். விதைகளை பழுக்க வைக்க வெப்பமான வறண்ட வளரும் பருவம் தேவைபடுகிறது. இது பொதுவாக கோடையின் பிற்பகுதியில் மற்றும் இலையுதிர் காலத்தில் தொடக்கத்திலும் விதை காய்கள் பழுப்பு நிறமாக மாற தொடங்கும். முழு விதை மற்றும் தலைகளை வெட்டி விதைகள் பலுக்கவும், உலர வைக்கவும் செய்கிறது. 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்



Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now