Summer Care of Rose Plant in Tamil
உங்கள் வீட்டில் உள்ள ரோஸ் செடிகளை வெயில் காலத்தில் எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி இந்த பதிவு இருக்க போகிறது. வெயில் காலம் வந்துவிட்டது என்றால் செடிகள் அனைத்தும் சோர்த்து போய்விடும். சில செடிகள் அனைத்தும் கருகி போய்விடும். நீங்கள் நினைப்பீர்கள் நாங்கள் சரியாகத் தான் தண்ணீர் ஊற்றுகிறோம். என்ன தான் செய்வது என்று கேள்வி இருக்கும். தண்ணீர் விட்டால் மட்டும் செடி வளர்வதில்லை..! அதனை சரியாக பராமரித்தால் தான் செடிகளில் நிறைய பூக்கள் பூக்கும். சரி வாங்க வெயில் காலத்தில் எப்படி செடிகளை பாதுகாப்பது என்று பார்க்கலாம்..!
Summer Care of Rose Plant in Tamil:
♦ பொதுவாக ரோஜா செடிகள் அதிகமாக பூக்கள் பூக்கும் என்று சொல்கிறார்கள். செடிகளில் பூக்கள் பூக்கும். ஆனால் அதிக வெயில் பட்டால் செடிகள் கருகி போய்விடும். மிதமான வெயிலில் தான் செடிகள் நிறைய பூக்கள் பூக்கும்.
♦ செடிகளை பூ தொட்டியில் வைத்தால் அதனை காலை மற்றும் மாலை என்று வெயில் படும் இடத்தை தவிர மற்ற இடத்தில் மாற்றி வைத்து கொள்ளலாம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 ரோஸ் செடி நன்கு வளர சில டிப்ஸ்
♦ அதேபோல் வெயில்காலத்தில் செடிகளில் உள்ள இலைகள் அனைத்தும் உதிர்ந்துவிடும். அப்போது அதனை நாம் கட் செய்துவிடும். அதேபோல் பூக்கள் பூத்தாலும் செடியில் உள்ள காம்பை கட் செய்வது வழக்கம்.
ஆனால் அதுபோல் செய்வதால் அந்த தண்டானது கருகிய நிலைக்கு சென்று அதிலிருந்து கிளை வெடிக்க தடையாக மாறிவிடும். சில நேரத்தில் செடிகள் இறந்துவிடும்.
♦ நீங்கள் பூக்களை நறுக்கும் போது அந்த கத்தியில் வேப்ப எண்ணெயை தடவி அதன் பின் அதனை நறுக்கி விடவும். அதன் பின்பு நறுக்கிய செடிகளை அப்படியே விடாமல் அதில் சிறிது மஞ்சள் தூளை குழைத்து அதன் மீது வைக்கவும். அப்போது தான் செடிகள் காயாமல் இருக்கும். மஞ்சள் தடவி நிழலில் வைக்கவும்.
இதையும் தெரிந்துகொளளுங்கள் ரோஜா செடியை வாங்கி வந்தால் அதில் இந்த தவறை செய்யாதீர்கள்
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |