தைவான் பிங்க் கொய்யா சாகுபடி முறை..!

தைவான் பிங்க் கொய்யா சாகுபடி

தைவான் பிங்க் கொய்யா சாகுபடி முறை (Taiwan guava cultivation in tamil)..!

பழப்பயிர் வரிசையில் முதல் இடத்தை பெற்றிருப்பது கொய்யாய் பழம். இந்த கொய்யாய் சாகுபடி பொறுத்தவரை வருடம் முழுவதும் நிலையான வருமானத்தை தரக்கூடியது. கொய்யா ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படுகிறது.

கொய்யா பழத்தில் அதிகளவு வைட்டமின் சத்து நிறைந்துள்ளது. சரி வாங்க இங்கு கொய்யாய் சாகுபடி முறையை பற்றி தெரிந்து கொள்வோம்.

பனங்கிழங்கு சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..!

கொய்யா சாகுபடி முறைக்கு ஏற்ற மண் / இடம்:-

தைவான் பிங்க் கொய்யா சாகுபடி (taiwan guava cultivation in tamil) பொறுத்தவரை தண்ணீர் தேங்காத அனைத்து வகை மண்ணிலும் சாகுபடி செய்யலாம். மேலும் ஓரளவு வறட்சியை தாங்கி வளரும், களர் நிலங்களில் கொய்யா சாகுபடி செய்வதை தவிர்த்து கொள்ளவும்.

இரகங்கள்:

கொய்யாவில் தற்போது அர்க்கா கிரண் மற்றும் லலித் ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. மேலும் சிலர் தைவான் பிங்க் ரகத்தை சாகுபடி செய்கின்றனர். இவை அளவில் பெரியதாக இருக்கும்.

தற்போது விவசாயிகள் தைவான் பிங்க் ரகத்தை அதிகம் சாகுபடி செய்து அதன் மூலம் நல்ல வருமானத்தை பெற்று வருகின்றனர்.

அதிக லாபம் தரும் சாமந்தி பூ சாகுபடி!!!

தைவான் கொய்யாய் சாகுபடி செய்ய ஏற்ற காலம்:-

தைவான் பிங்க் கொய்யா சாகுபடி பொறுத்தவரை ஆடி, தை மாதங்களில் சாகுபடி செய்ய ஏற்ற காலம்.

கொய்யாவை சாதாரண நடவு முறை (15×15 அடி இடைவெளியிலும்), அடர் நடவு முறை (5×5 அடி இடைவெளி) மற்றும் மிக அடர் நடவு முறை (3×6 அடி இடைவெளி) ஆகிய முறைகளில் நடவு செய்யலாம்.

விதையளவு:-

தைவான் பிங்க் கொய்யா சாகுபடி (taiwan guava cultivation in tamil) பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 1200 கன்றுகள் இருந்தால் போதுமானது.

நடவு குழிகள் 20×20 செ.மீ அளவு அகலம் மற்றும் ஆழம் எடுக்கப்படுகின்றன. பிறகு குழிகளில் சுமார் 50 கிராம் கிளிஞ்சல் சுண்ணாம்பு தூள் தூவ வேண்டும்.

பின்பு சுமார் 1.5 கிலோ செறிவூட்டிய மண்புழு உரம் இட்டு செடிகளை நடவு செய்து பின்னர் செடியை சுற்றி மண் அணைக்க வேண்டும்.

நீர் மேலாண்மை:-

தைவான் பிங்க் கொய்யா சாகுபடி பொறுத்தவரை சாதாரணமாக நடவுக் குழிகளில் நேரடியாக மக்கிய தொழுவுரத்தை இடுவதை தவிர்க்கலாம்.

ஏனெனில் இதனால் சில சமயங்களில் வேர் சம்மந்தமான நோய்கள் தாக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு சொட்டுநீர் பாசனம் சிறந்தது.

களை நிர்வாகம்:-

தைவான் பிங்க் கொய்யா சாகுபடி:- களைக் கட்டுப்பாடு என்பது அனைத்து பயிர்களிலும் அவசியம். எனவே நடவு செய்த இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நுனி கிளைகளை கிள்ளிவிட வேண்டும்.

அல்லது வெட்டி விட வேண்டும். இவ்வாறு செய்வதினால் பக்கக்கிளைகள் அதிகம் உருவாகும். செடிகளில் அதிக காய்கள் பிடிக்க வழிவகுக்கும்.

மல்லிகை பூ சாகுபடி முறைகள்..!

பயிர் பாதுகாப்பு:-

தைவான் பிங்க் கொய்யா சாகுபடி பொறுத்தவரை மாவு பூச்சிகள் தொல்லை அதிகம் இருக்கும். எனவே 200 லிட்டர் தண்ணீரில் டீ கம்போஸ்ட் மற்றும் ஒரு கிலோ வெல்லம் சேர்த்து கலந்து 4 நாட்கள் மூடி வைக்க வேண்டும்.

பின் நான்கு நாள் கழித்த பின் கொய்யாய் செடிகள் மீது தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் மாவு பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும்.

அறுவடை:-

நடவு செய்த இரண்டு மாதங்களில் செடிகளில் காய்கள் பிடிக்க ஆரம்பிக்கும். நன்றாக வளர்ந்த காய்களை பறித்து விற்பனை செய்யலாம். வருடத்திற்கு இரண்டு முறை அறுவடை செய்யலாம். மகசூலாக 3 டன் காய்கள் கிடைக்கும். இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 8 லட்சம் வரை வருமானம் பார்க்க முடியும்.

 

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Pasumai Vivasayam in Tamil