Thakkali Sedi Valarpu in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய காலகட்டத்தில் அனைவருமே தங்களின் வீடுகளில் அழகுக்காகவோ தேவைக்காகவோ பல வகையான செடிகளை வளர்க்கிறார்கள். அப்படி பலரும் விருப்பப்பட்டு வளர்க்கும் செடிகளில் ஒன்று தான் தக்காளி செடி. அப்படி நாம் விருப்பப்பட்டு வளர்க்கும் தக்காளி செடியில் அதிக காய்கள் காய்க்க வில்லையே என்று கவலைபடுபவர்களுக்காக தான் இன்றைய பதிவு. ஆம் நண்பர்களே தினமும் நமது பதிவின் மூலம் உங்களின் செடிகளின் ஆரோக்கியத்தை பலப்படுத்த உதவும் குறிப்புகளை பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தக்காளி செடியில் அதிக அளவு காய்கள் காய்ப்பதற்கு உதவும் குறிப்பினை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். எனவே இன்றைய பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
ஒரு கைப்பிடி உளுந்து போதும் காய்ந்த ரோஜா செடியும் பூத்து குலுங்கும்
தக்காளி செடி வளர்ப்பது எப்படி..?
பொதுவாக ஒரு தாவரம் வளர வேண்டும் என்றால் அதற்கு நன்கு சூரிய ஒளி தேவை என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த ஒரு தகவல் தான். அதனால் நமது வீடுகளில் உள்ள தக்காளி செடியை நன்கு சூரிய ஒளிப்படுகின்ற இடங்களில் நடவு செய்யுங்கள்.
இப்பொழுது அது நன்கு செழித்து வளர்ந்து நன்கு காய்கள் காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- நன்கு புளித்த மோர் – 1 லிட்டர்
- பெருங்காய தூள் – 4 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – 4 லிட்டர்
- கடலை புண்ணாக்கு – 2 கைப்பிடி அளவு
- வேப்பம் புண்ணாக்கு – 2 கைப்பிடி அளவு
கடுகு மட்டும் போதும் குச்சிபோல் உள்ள ரோஜா செடியும் துளிர்விட்டு பூத்து குலுங்கும்
செய்முறை:
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 லிட்டர் நன்கு புளித்த மோரை ஊற்றி அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 4 லிட்டர் தண்ணீரையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பிறகு அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 4 டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள், 2 கைப்பிடி அளவு கடலை புண்ணாக்கு மற்றும் 2 கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இதனை ஒரு வாரத்திற்கு அப்படியே விடுங்கள். பின்னர் இதிலிருந்து ஒரு கப் எடுத்து இரண்டு மடங்கு தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து உங்களது வீடுகளில் உள்ள தக்காளி செடிகளுக்கு ஊற்றுங்கள்.
இதனை தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்களின் தக்காளி செடியில் அதிக காய்கள் காய்ப்பதை நீங்களே காணலாம்.
1 கப் தேங்காய் பால் போதும் மாதுளை செடியில் உள்ள பிஞ்சிகள் அனைத்தும் காய்களாக மாற
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |