உங்கள் வீட்டு செடிகளை வளர விடாமல் தடுக்கும் பூச்சிகளை விரட்ட இந்த ஒரு கரைசல் போதும்..!

Advertisement

பூச்சிகளை விரட்டும்

செடிகள் மற்றும் பயிர்களில் பூச்சிகள் அட்டகாசம் செய்யும். செடியின் வளர்ச்சியை பூச்சிகள் கெடுத்து விடும். பூச்சிகளை விரட்டுவதற்காக கடைகளில் விற்கும் பல மருந்துகளை வாங்கி பயன்படுத்துவீர்கள். அதில் சில மருந்துகள் பலன் கொடுத்திருக்கும், சில மருந்துகள் பலன் கொடுத்திருக்காது. ஆனால் இனிமேல் காசு கொடுத்து பூச்சிகளை விரட்டுவதற்கு மருந்து வாங்க தேவையில்லை. இந்த பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி பூச்சிகளை விரட்டுவதற்கு மருந்து தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

தேமோர் கரைசல் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  1. பால் –1 லிட்டர்
  2. தயிர் –1 லிட்டர்
  3. தண்ணீர் –1 லிட்டர்

இதையும் படியுங்கள் ⇒  மண்புழு உரம் தயாரிக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள்..!

தேமோர் கரைசல் செய்முறை:

தேமோர் கரைசல் செய்முறை

ஒரு மூடி போட்ட பாத்திரத்தை எடுத்து கொள்ள வேண்டும். இந்த பாத்திரத்தில் 1 லிட்டர் பால், 1 லிட்டர் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த பாத்திரத்தை மூடி 5 அல்லது 6 நாட்களுக்கு அப்படியே நிழலில் வைக்க வேண்டும்.

பாத்திரம் மண் சட்டியாக இருந்தால் நல்லது. ஏனென்றால் மண் பானையில்  கரைசலை வைத்து ஊற விடுவது நுண்ணுயிர் சத்துக்கள் கிடைக்கும். ஆறு நாட்கள் கழித்து கரைசல் உள்ள பாத்திரத்தை திறந்து ஒரு குச்சியை வைத்து கலந்து விடவும். அவ்ளோ தாங்க கரைசல் ரெடி.!

தேமோர் கரைசல் பயன்படுத்துவது எப்படி.?

தேமோர் கரைசல் செய்முறை

 தேமோர் கரைசலை 15ML எடுத்து 1/2 லிட்டர் தண்ணீரில் கலந்து கொள்ளவும். இந்த கரைசலை செடிகளின் மீது ஸ்பிரே மாதிரி அடிக்கவும். வெயில் நேரத்தில் தேமோர் கரைசலை செடிகளுக்கு அடிக்க கூடாது. காலை 7 மணிக்குள் அல்லது மாலை 5 மணிக்கு மேல் தேமோர் கரைசலை செடிகளுக்கு அடிக்கலாம்.  

உங்கள் வீட்டில் எந்த செடியாக இருந்தாலும் அதிலிருந்து பூ பூக்கும் நேரத்தில் தேமோர் கரைசல் அடிப்பது அந்த செடியிலிருந்து அதிக காய்கள் காய்ப்பதற்கு உதவியாக இருக்கும். பூ பூக்க ஆரம்பித்த நாட்களில் இருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை தேமோர் கரைசலை பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் எந்த செடி வைத்திருந்தாலும் அதிலிருந்து அதிக விளைச்சலை பெறுவதற்கு இந்த தேமோர் கரைசலை பயன்படுத்துங்கள் நண்பர்களே.!

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

 

இதையும் படியுங்கள் ⇒ ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை..!  

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement