செடிகள் நடுவதற்கு முன் கவனிக்க வேண்டியவை
வணக்கம் நண்பர்களே.! செடியை நட்ட பிறகு வளரவே இல்லை கவலை என்று கவலைப்படுவீர்கள். செடியை வளர்வதற்கு முன் சில விஷயங்களை பார்த்து நட வேண்டும். அப்படி நீங்கள் பார்த்து நட்டுவீட்டிர்கள் என்றால் செடி சிறப்பாக வளரும். இந்த செடி வளரும் வளராது என்றெல்லாம் இல்லை. அந்த செடியை நடுவதற்கு முன்பிலுருந்து செடி வளரும் வரை அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பதிவில் செடியை நடுவதற்கு முன் கவனிக்க வேண்டியவை என்னவென்று தெரிந்துகொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ வீட்டு தோட்டத்தில் மண் வளத்தை அதிகரிக்கும் வழிகள்
செடியை நடுவதற்கு இடம்:
செடியை நடுவதற்கு முன் முதலில் பார்க்கவேண்டியது இடம் தான். நீங்கள் நடும் செடியை பொறுத்து இடத்தின் அளவை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் மர செடியை வைத்தால் வளர்ந்த பிறகு அது பெரிதாக விடும். அதனால் இடத்தை தேர்வு செய்வது முக்கியமான ஒன்றாகும்.
சூரிய ஒளி பயன்கள்:
செடிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சூரிய ஒளி முக்கியமான ஒன்றாகும். அதனால் நீங்கள் செடி நடுவதற்கு தேர்வு செய்யும் இடத்தில் சூரிய ஒளி படும்படி வைக்க வேண்டும்.
களைகள் இல்லாமல் இருக்க வேண்டும்:
செடி நடுவதற்கு தேர்வு செய்த இடத்தில் களை இல்லாமல் எடுக்க வேண்டும். களைகள் இருந்தால் செடியின் வளர்ச்சியை பாதிக்கும்.
மண் தேர்வு செய்வது எப்படி.?
செடி வளர்ச்சிக்கு மண் முக்கியமான ஒன்றாகும். எந்த மண்ணில் எந்த செடியை வைத்தால் வளர்ச்சியடையும் என்பதை அறிந்து செடியை நட வேண்டும். அப்போது தான் செடி நன்கு வளர்ச்சி அடையும்.
மண்ணின் ஈரப்பதம்:
செடி நடுவதற்கு தேர்வு செய்த இடத்தில் மண்ணின் ஈரப்பதத்தை கவனிக்க வேண்டும். செடிகளின் வளர்ச்சிக்கு மண்ணின் ஈரப்பதம் முக்கியமானது.
உரம் இடும் முறை:
செடி வைப்பதற்கு குழி தோண்டிருப்போம். அந்த குழியில் ஆட்டு சாணம், காய்ந்த இலைகள், மக்கிய உரம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். செயற்கை உரம் பயன்படுத்தினால் அளவு பார்த்து போட வேண்டும்.
காலநிலை மாற்ற இயக்கம்:
செடிகள் நடுவதற்கு காலநிலை அறிந்து நட வேண்டும். கோடை காலத்தில் செடிகளை நட்டால் அதிக வெப்பத்தின் காரணமாக செடிகள் வளர்ச்சி அடையாது. செடிகள் நடுவதற்கு இலையுதிர் காலம், வசந்த காலம் உகந்த காலமாகும்.
மேல் கூறப்பட்டுள்ளது போல் செடிகள் நடுவதற்கு முன் கவனித்து வைத்தீர்கள் என்றால் செடிகள் நன்கு வளர்ச்சி அடையும்.
மரம் வளர்ப்போம்.!
மழை பெறுவோம்.!
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | தெரிந்துகொள்ளுங்கள் |