Tips to Grow Lots of Papaya
நமது வீட்டில் நிறைய வகையான செடிகள் மற்றும் மரங்கள் என அனைத்தையும் வளர்த்து வருவது இயல்பான ஒன்று. ஆனால் நாம் கஷ்டப்பட்டு வளர்த்து வரும் செடிகளில் சில நேரம் பூக்கள் வைக்காமல் அப்படியே இருக்கும். இதுமாதிரி பூக்கள் சரியாக வைக்கவில்லை என்றால் காய்கள் கைப்பது மிகவும் கடினமான ஒன்று. நாமும் எப்படியாவது செடி நிறைய பூ பூக்க வைத்து நிறைய காய்கள் காய்க்க வேண்டும் என்று கடையில் விற்கும் மருந்தினை வாங்கி உபயோகப்படுத்தி பார்ப்போம். ஆனால் அவை அனைத்தும் முழுமையான பலனை அளிப்பது இல்லை. இப்படி நீங்கள் கஷ்டப்பட்டு பூக்கள் பூக்க வைத்து காய்கள் காய்க்க முயற்சிப்பதில் பப்பாளி மரமும் ஒன்று. ஆகவே மரம் நிறைய பப்பாளி காய்க்க என்ன செய்ய வேண்டும் என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்வோம் வாருங்க.
மாங்காய் மரத்தில் மாங்காய் கொத்து கொத்தாக காய்க்க இந்த Tips ட்ரை பண்ணுங்க..! |
பப்பாளியின் வகைகள்:
பப்பாளியில் இரண்டு வகைகள் இருக்கிறது.
- ஆண் பப்பாளி மரம்
- பெண் பப்பாளி மரம்
இரண்டு வகைளில் ஆண் பப்பாளி மரத்தில் காய்கள் காய்ப்பது இல்லை. ஆனால் பெண் பப்பாளி மரத்தில் காய்கள் காய்க்கும்.
பப்பாளி மரத்தில் நிறைய காய்கள் காய்க்க:
பப்பாளி மரத்திற்கு நிறைய அளவில் தண்ணீர் ஊற்ற வேண்டும். மரம் காய்ந்து போகாத அளவுற்கு ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
வீட்டில் இயற்கையான முறையில் கிடைக்கும் மாட்டு சாணத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறுதளவு தண்ணீர் ஊற்றி கலந்து அந்த தண்ணீரை பப்பாளி மரத்திற்கு உரமாக அளிக்க வேண்டும்.
அப்படி இல்லை என்றால் வெறும் மாட்டுச்சாணத்தை கூட இந்த மரத்திற்கு உரமாகவும் அளிக்கலாம்.
உங்களுடைய வீட்டில் சமையலுக்கு பயன்படாமல் இருக்கும் அழுகிய காய்கறிகள், அரிசி கழுவும் தண்ணீர் இந்த இரண்டினையும் நன்றாக ஊறவைத்து அதனையும் பப்பாளி மரத்திற்கு உரமாக அளிக்கலாம்.
மேலே சொல்லப்பட்டுள்ள முறைகளை மட்டும் நீங்கள் பயன்படுத்தினால் போதும் பப்பாளி மரத்தில் நிறைய பூக்கள் பூத்து காய் நிறைய காய்க்கும்.
பூச்சிகள் தாக்காமல் இருக்க:
பப்பாளி மரத்தில் பூச்சிகள் தாக்காமல் இருக்க ஒரு இயற்கை மருந்தினை தயாரிக்க வேண்டும்.
தேவையான பொருட்கள்:
- மாட்டுகோமியம்- 100 மில்லி
- மாட்டுச்சாணம்- 2 கைப்பிடி
- வேப்பிலை- சிறிதளவு
- தண்ணீர்- தேவையான அளவு
மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை 2 நாட்களுக்கு முன்பாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். 2 நாட்கள் கழித்த பிறகு எடுத்துவைத்துள்ள பொருட்களை ஒரு பெரிய வாலியில் போட்டு நன்றாக குச்சியால் கலந்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு 48 மணி நேரம் கழித்த பிறகு தயார் செய்து வைத்துள்ள உரத்தினை பார்த்தால் தரையாகிவிடும். இப்போது இந்த உரத்தில் தண்ணீர் கொஞ்சம் கலந்து அதனை பப்பாளி மரத்தில் தெளித்து விட்டால் போதும்.
மரத்தை பூச்சிகள் எதுவும் தாக்காமல் இருக்க செய்து நிறைய காய்கள் காய்க்க உதவும்.
இதையும் படியுங்கள்⇒ எலுமிச்சை மரத்தில் கொத்து கொத்தாக காய் காய்க்க இதை மட்டும் செய்யுங்க..!
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |