பயிர் காப்பீடு | TN Crop Insurance in Tamil
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டு குளிர்கால (ராபி) பருவப் பயிர்களை உடனடியாக காப்பீடு செய்ய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. அது குறித்த தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
வேளாண்மை – உழவர் நலத்துறை:
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டு குளிர்கால (ராபி) பருவப் பயிர்களை உடனடியாக காப்பீடு செய்ய விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பயிர் இழப்புகளிலிருந்து விவசாய மக்களை பாதுகாக்க, விவசாயிகள் சார்பாக காப்பீட்டுக் கட்டணத் தொகையை காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்துவதற்காக மாநில அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.2339 கோடி நிதியினை ஒதுக்கி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் நடப்பு 2022-2023ஆம் ஆண்டில், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (PMFBY) சிறப்பு மற்றும் குளிர்கால (ராபி) பருவங்களில், இது வரை 54.63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு 33 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.
நடப்பாண்டில், சிறப்பு மற்றும் குளிர்கால (ராபி) பருவங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்ய கீழ்க்கண்டவாறு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காலக்கெடு:
பயிர் | மாவட்டம் | காலக்கெடு |
நிலக்கடலை | சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், தர்மபுரி, இராமநாதபுரம், நாமக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், சிவகங்கை | 31 டிசம்பர் 2022 |
மக்காச்சோளம்-III | தேனி, தருமபுரி, திருநெல்வேலி | 31 டிசம்பர் 2022 |
கம்பு | தூத்துக்குடி | 31 டிசம்பர் 2022 |
ராகி | தருமபுரி | 31 டிசம்பர் 2022 |
சூரியகாந்தி | தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர் | 31 டிசம்பர் 2022 |
எள் | தூத்துக்குடி | 31 டிசம்பர் 2022 |
பருத்தி-III | தருமபுரி | 31 டிசம்பர் 2022 |
இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
உங்கள் வீட்டு செடிகளை வளர விடாமல் தடுக்கும் பூச்சிகளை விரட்ட இந்த ஒரு கரைசல் போதும்..!
தேவைப்படும் ஆவணங்கள்:
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் / விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass Book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் போன்ற ஆவணங்களையும் இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொதுச் சேவை மையங்கள் / தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ள வேண்டும். பயிர் காப்பீட்டுக் கட்டணத் தொகையில், பெரும்பாலான பங்குத் தொகை மாநில ஒன்றிய அரசுகள் செலுத்திவிடும் என்பதால் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதுமானது.
எங்கெல்லாம் கட்டணம் தொகையை செலுத்தலாம்:
மேற்குறிப்பிட்ட தேதிக்குள் அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ (CSC) தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களிலோ (PACCS) அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீட்டுக் கட்டணத்தை (Premium) செலுத்தி தங்களது பயிர்களைக் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |