பூச்செடிகளில் பூச்சிகள் வராமல் தடுக்க – To Prevent Pests From Entering The Plant in Tamil
உங்கள் வீட்டில் செடிகள் உள்ளதா..? இருந்தால் மகிழ்ச்சி. ஏனென்றால் இந்த காலகட்டத்தில் வயல் இருந்தால் கூட அதனை இடித்து வீடாக கட்டி அதனை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறார்கள். ஆனால் இது இப்போது வேண்டுமென்றால் உங்களுக்கு நன்மையை கொடுக்கும். பின்பு உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்கள் வம்சத்திற்கு அது நன்மையை அளிக்காது. ஆகவே மரம் வளர்ப்பதற்கும், மேலும் அதனை வெட்டாமலும் பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால், உங்கள் வீட்டிலும் இனி செடி வளர்க்க பழகுங்கள்.
பூச்செடிகளில் பூச்சிகள் வராமல் தடுக்க:
சிலர் வீட்டில் நிறைய செடிகளை வளர்ப்பீர்கள். அந்த செடிகளை வளர்க்க நிறைய கஷ்டப்படுவீர்கள். முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த வெயில் காலத்தில் செடிகள் கருகி போவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனை சரி செய்ய செடிகளுக்கு உங்கள் வீட்டில் காய்கறிகள் அறிந்த பின்பு அதில் தூக்கி எரியும் காய்கறிகளை அதில் போடவும்.
அதுபோல் முட்டை ஓடு, டீ தூள் போடவும். இது அனைத்துமே உரம் தான். இதை விட்டுவிட்டு செயற்கையாக தயாரிக்கும் உரங்களை அதில் போடாதீர்கள்.
இங்கு செடி கருகி போவதை விட செடிகளில் நிறைய பூச்சிகள் ஏற்படும். இதற்கு என்ன தீர்வு தெரியுமா..? மிகவும் சிறிய வேலை தான். அதனை செய்தால் மட்டும் போதும் உங்கள் செடிகள் அனைத்தும் நல்லா வளரும்.
கற்றாழை செடி வீட்டில் ஈசியாக வளர்வதற்கு இதை மட்டும் Follow பண்ணுங்க..
முன்பு பூச்சிகள் அனைத்தும் தோட்டத்தில் இருந்தால் தான் வரும். ஆனால் இப்போது பூ தொட்டில் இருந்தால் கூட பூச்சிகள் வந்துகொண்டு தான் உள்ளது. அதற்கு நீங்கள் 5 லிட்டர் தண்ணீரில், வேப்ப எண்ணெய் 5 மிலி கலந்து செடிகளில் ஸ்பிரே செய்தால் போதும். செடிகளில் பூச்சிகள் வராது அதேபோல் இதனை அதிகம் அடிக்க கூடாது.
வேப்ப எண்ணெய் மட்டும் சேர்த்து தெளித்தால் அதில் பூச்சிகள் வராது. அதனால் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் வேப்ப எண்ணெய் 5 மில்லி ஊற்றி அதன் பின்பு அடித்தால் பூச்சிகள் அனைத்தும் மாட்டிக் கொள்ளும். இதனை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் மாற்றம் தெரியும்.
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |