துளசி செடியை காய விடாமல் செழிப்பாக வளர்க்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

Advertisement

துளசி செடி நன்றாக வளர

வீட்டில் செடிகளை வளர்ப்பது என்பது மிகவும் எளிமையான ஒன்று அல்ல. ஏனென்றால் என்ன தான் நாம் செடிக்கு தண்ணீர், உரம் என அளித்து தனியாக தோட்டம் போல் அமைத்து வளர்த்து வந்தாலும் கூட அவை செழிப்பாக வளருவது இல்லை. அதிலும் வீட்டில் பூச்செடிகள் இருந்தால் அவ்வளவு தான் எப்போது அந்த செடி மொட்டு வைக்கும், பின்பு எப்போது பூ பூக்கும் என்று ஆர்வத்தோடு காத்து கொண்டிருப்போம். ஆனால் நீண்ட நாட்கள் கழித்தும் பூச்செடியில் பூக்கள் பூக்காமல் போகிவிடும். அவ்வாறு நாம் வளர்க்கும் செடிகளில் செம்பருத்தி செடி, துளசி செடி மற்றும் கற்றாழை செடி இவை எல்லாம் கட்டாயமாக இருக்கும். ஆனால் இவற்றை செழிப்பாக வளர்ப்பதில் மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்பது தான் பெரும்பாலான வீட்டில் உள்ளவர்களின் புலம்பலாக இருக்கிறது. அதனால் இன்று ஆரோக்கியத்திலும், ஆன்மீகத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த துளசி செடியினை காய விடாமல் செழிப்பாக வளர செய்ய என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

செடி வளர்ப்பு 👉👉  கற்றாழை செடி வீட்டில் ஈசியாக வளர்வதற்கு இதை மட்டும் Follow பண்ணுங்க.. 

How to Grow Tulsi Plant at Home:

துளசி செடியை செழிப்பாக வளர்க்க

டிப்ஸ்- 1

துளசி செடியினை அதிகம் வெயில் உள்ள இடத்தில் வைக்க கூடாது. ஏனென்றால் வெயில் அதிகமாக செடியின் மீது பட்டால் செடி வாடிவிடும். அதனால் மிதமான வெயில் இருக்கும் இடத்தில் துளசி செடியினை வைத்தல் வேண்டும்.

டிப்ஸ்- 2

இந்த செடிக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை என காலை மற்றும் மாலை இரண்டு வேலையிலும் தண்ணீர் விடுவது மிகவும் அவசியம். ஈரப்பதம் சுத்தமாக இல்லை என்றால் இந்த செடி விரைவில் வாடிவிடும்.

டிப்ஸ்- 3

அதே போல இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செடியின் நுனிப்பகுதியினை நறுக்கி வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதனால் செடி செழிப்பாக வளரும்.

பூச்சி தாக்காமல் இருக்க:

துளசி செடிகளை எந்த விதமான பூச்சிகளும் தாக்காமல் இருக்க வேப்ப எண்ணெய் கரைசலை அளிக்க வேண்டும். அதற்கு முதலில் 1 லிட்டர் தண்ணீரில் 1 மூடி வேப்ப எண்ணெய் மற்றும் Liqiued Soap 1 ஸ்பூன் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து துளசி செடியின் மீது படுமாறு தெளிக்க வேண்டும்.

இதனை வாரம் ஒரு முறை என செய்தால் மட்டுமே போதுமானது.

செடிகளுக்கு உரம்:

மண்புழு உரம்

இந்த செடிக்கு அதிகமாக உரம் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால் மாதம் 1 முறை 1 கைப்பிடி மண்புழு உரம் அல்லது மாட்டுச்சாணம் உரம் இந்த இரண்டில் எதாவது ஒன்றினை மட்டும் செடிகளுக்கு உரமாக அளித்தால் போதும் செடி மற்றும் செடியில் உள்ள இலைகள் அனைத்தும் செழிப்பாக வளரும்.

செடி வளர்ப்பு 👉👉 மயில் மாணிக்கம் செடி வீட்டில் வளர்க்கும் முறை…

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement