வெண்டைக்காய் மகசூலை அதிகரிக்க
இந்தியாவில் உற்பத்தியாகும் மிக முக்கியமான காய் வெண்டைக்காய். இது வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகள் மற்றும் மிதமான பகுதிகளில் வெப்பமான பகுதிகளிலும் நன்கு வளரக்கூடியது. இந்தியாவில் வெண்டைக்காய் ஏற்றுமதி 65% நடைபெறுகிறது. அதிக சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காய் மகசூல் இந்தியாவில் ஆண்டு முழுவதும் நடைபெறும். அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அத்தகைய சிறப்புவாய்ந்த வெண்டைக்காய் உங்கள் தோட்டத்தில் இருந்தால் அதன் விளைச்சலை எவ்வாறு அதிகரிப்பது என்று உங்களுக்கு தெரியவில்லையா, வாருங்கள் இந்த பதிவை முழுமையாக படித்தது உங்கள் தோட்டத்தில் உள்ள வெண்டை செடியின் விளைச்சலை அதிகரிப்போம்.
வெண்டைக்காய் விளைச்சலை அதிகரிக்க:
நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் முக்கியமானதாக இருக்கும் வெண்டைக்காய் விளைச்சலை, இனி உங்க தோட்டத்தில் சிறப்பான முறையில் செய்ய சில டிப்ஸ்…
காலநிலை:
வெண்டைக்காய் வளர மிதமான வெப்பம் (அதாவது 22-35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை) தேவைப்படும்.
நிலத்தில் சரியான அளவு ஈரப்பதம் இருந்தால் மகசூல் அதிகரிக்கும்.
இது மழைக்காலத்திலும் இந்த பயிர்களின் விளைச்சல் அதிகமாக இருக்கும்.
மண் தேவை:
வெண்டைக்காய் அனைத்து வகையான மண்ணிலும் நன்றாக வளரக்கூடியது.
வெண்டைக்காயின் அதிக விளைச்சலுக்கு களிமண் சிறந்தது.
மண்ணின் pH மதிப்பு 6 முதல் 6.8 வரை இருந்தால் சிறந்தது.
நிலம் தயாரித்தல்:
வெண்டைக்காய் பயிரிட போகும் நிலத்தை 2 அல்லது 3 முறை உழவு செய்ய வேண்டும்.
நிலத்தினை உழவு செய்யும் போது, நன்கு மக்கிய தொழு உரம் எக்டருக்கு 25 டன் என்ற கணக்கில் ஈட்டு ம்,மண்ணினை தயார்படுத்த வேண்டும்.
வேப்பம் பிண்ணாக்கு செடியின் வளர்ச்சி மற்றும் விளைச்சலை அதிகரிக்க உதவும்.
விதைக்க கூடிய காலம்:
கோடை காலத்தில், 1 எக்டருக்கு 5 முதல் 6 கிலோ விதைகளை விதைக்கலாம். அதுவே மழைக்காலத்தில், 8 முதல் 12 கிலோ விதைக்க வேண்டும்.
விதைகளை விதைப்பதற்கு முன் பாவிஸ்டின் (0.2%) கரைசலில் 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த விதைகளை நிழலில் உலர வைக்க வேண்டும்.
மழை காலத்தில் 60 x 30 செ.மீ இடைவெளியிலும், கோடை காலத்தில் 30 x 30 செ.மீ இடைவெளியிலும் விதைகளை விதைக்க வேண்டும்.
நீர்ப்பாசனம்:
கோடையில், பயிர் வேகமாக வளர மண்ணில் பொருத்தமான ஈரப்பதம் தேவைப்படுகிறது. முழு விளைச்சலுக்கு சீரான ஈரப்பதம் தேவைப்படுவதால் சொட்டு நீர் பாசனம் பயிர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உரங்கள் மற்றும் உரங்கள்:
வெண்டை வளர்ச்சிக்கு அதிக கரிம உரம் தேவைப்படுகிறது. அதனால் நிலத்தை உழும் போதே தொழு உரம் ஈட வேண்டும்.
அறுவடை:
நடவு செய்த 35-40 நாட்களில் பூக்கத் தொடங்கிவிடும். 55 முதல் 65 நாட்களில் அறுவடை செய்யலாம்.
காய்க்காத மிளகாய் செடியில் கிலோ கணக்கில் காரமான காய் காய்க்க நிலக்கடலை மட்டும் போதும்..!
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |