வெண்டைக்காய் பை பையாய் இல்லங்க கூடை கூடையாய் காய்க்க மட்டும் செய்யுங்க..

Advertisement

வெண்டைக்காய் செடி அதிக காய்கள் காய்க்க 

பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காய்கறி பிடிக்கும். இதனை கடையில் தான் வாங்குகிறார்கள். பெரும்பாலும் வீட்டில் பூச்செடிகளை தான் வளர்க்கிறார்கள். காய்கறி செடிகளை வளர்க்க மாட்டிக்கிறார்கள். நீங்கள் கடையில் வாங்கும் காய்கறியானது கெமிக்கல் நிறைந்ததாக இருக்கும். அதுவே நீங்கள் வீட்டில் வளர்த்தால் ஆரோக்கியமான காய்கறிகளை சாப்பிடலாம். வீட்டில் காய்கறி செடிகளை வளர்க்கும் வளர மாட்டிக்கிறது என்று தான் பெரும்பாலானவர்கள் கவலைப்படுகிறார்கள். அதனால் தான் இந்த பதிவில் வெண்டைக்காய் செடியில் அதிக காய்கள் காய்க்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

வெண்டைக்காய் செடி அதிக காய்கள் டிப்ஸ்:

வெண்டைக்காய் செடி அதிக காய்கள் காய்க்க 

வெண்டை பயிரிட உகந்த காலம்:

ஜனவரி மற்றும் ஜூன் மாதம் வெண்டை பயிரிடுவதற்கு உகந்த காலமாக இருக்கிறது. இந்த மாதத்தில் பயிரிடும் போது அதிகமான காய்கள் காய்ப்பதற்கு உதவி செய்கிறது.

மண் மற்றும் தேவையானது:

வெண்டைக்காயை சூரிய வெளிச்சம் உள்ள இடத்தில் பயிரிட வேண்டும். மேலும் எல்லா மண்ணிலும் வெண்டைக்காய் வளர்வதற்கு உகந்ததாக இருக்கிறது.

அமிலத்தன்மை நிறைய இருக்கின்ற மண் கலவை உகந்ததாக இருக்கும். Ph ஆனது 6.8 வரை இருக்க வேண்டும்.

வெண்டையை பயிரிடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் மண்ணில் குழி தோண்டி, மட்கும் உரம், தண்ணீர் விட்டு இரண்டு நாட்களுக்கு அப்படியே விடவும்.

நெல் வயலில் எலி தொல்லை நீங்க வறுத்த கடலையை இப்படி செய்து வைத்தாலே போதும் 

தண்ணீர் ஊற்றுவது எப்படி.?

வெண்டைக்காய் செடிக்கு நிறைய தண்ணீர் ஊற்ற தேவையில்லை, மாறாக எப்போதும் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.

தண்ணீரை இலைகளில் ஊற்றாமல் செடிக்கு மட்டும் ஊற்ற வேண்டும். நீங்கள் தண்ணீர் ஊற்றும் போது காலை நேரத்தில் தண்ணீரை ஊற்ற வேண்டும்.

என்னென்ன உரம் போடலாம்:

எரு மற்றும் மட்கும் உரங்கள்

மண்புழு உரம்

பஞ்ச காவியம்

மேல் கூறப்பட்டுள்ள உரங்களில் உங்களுக்கு எது முடிகிறதோ அதை மட்டும் மாதத்திற்கு இரண்டு முறை ஊற்றி வந்தாலே நல்ல பலனை காணலாம்.

பூ பூத்தல்: 

செடி முளைத்த 35 அல்லது 40-வது நாள் பூ பூக்க துவங்கி விடும், இவை மஞ்சள் நிறத்தில் பூக்கள் அழகாக பூக்கும்.

பூ பூத்த 5-வது நாள் காய்கள் காய்க்க ஆரம்பித்து விடும், வெண்டைக்காய்களை முற்ற விடாமல் பறித்து விட வேண்டும்.

பூக்கவே பூக்காத செம்பருத்தி செடியிலும் கூடை கூடையாக பூக்கள் பூக்க வேர்க்கடலை மட்டும் போதும்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement