ஒரே ஒரு வெண்டைக்காய் செடியில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க வெங்காயம் மட்டும் போதும்..!

Vendakkai Chedi Athiga Kaigal Kaika Tips in Tamil

பொதுவாக நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து இந்த உலகில் நம்முடன் இணைந்து வாழ்கின்ற விலங்குகள் மற்றும் தாவர வகைகளின் மீது நமக்கு அதீத ஆசை மற்றும் பாசம் உள்ளது அதனால் நாம் அனைவருமே நமது வீடுகளில் சிறிய அளவிலான தோட்டம் அல்லது மாடி தோட்டத்தை அமைத்து அதில் நமக்கு பிடித்த மற்றும் நமக்கு பயனுள்ள பலவகையான தாவரங்களை வளர்த்து வருகின்றோம். அப்படி நாம் அனைவரின் வீட்டில் உள்ள தோட்டங்களில் கண்டிப்பாக இடம் பெற்றுள்ள ஒரு செடி என்றால் அது பச்சை வெண்டைக்காய் செடி தான். அப்படி நாம் மிகவும் விருப்பப்பட்டு வளர்க்கும் வெண்டைக்காய் செடியில் ஏதாவது ஒரு பூச்சி தாக்குதல் ஏற்பட்டு அது சரியாக காய்க்கவில்லை என்றால் நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் இன்று வெண்டைக்காய் செடியில் உள்ள பூச்சித்தாக்குதலை நீக்கி அதிக அளவு காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க.. 

நெல் வயலில் எலி தொல்லை நீங்க வறுத்த கடலையை இப்படி செய்து வைத்தாலே போதும்

Vendakkai Sedi Athiga Kaigal Kaika Enna Seiya Vendum:

Vendakkai Sedi Athiga Kaigal Kaika Enna Seiya Vendum

நாம் அனைவருக்குமே வெண்டைக்காய் என்றால் மிக மிக பிடித்த காய் ஆகும். அதனால் அதனை அனைவருமே நமது வீடுகளில் விரும்பி வளர்ப்போம். அப்படி நாம் மிக மிக விரும்பி வளர்க்கும் வெண்டைக்காய் செடியில் அதிக காய்கள் காய்க்க உதவும் குறிப்பினை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க.

குறிப்பிற்கு தேவையான பொருட்கள்:

  1. வெங்காய தோல் – 2 கைப்பிடி அளவு
  2. பூண்டு தோல் – 2 கைப்பிடி அளவு
  3. கடலை புண்ணாக்கு – 1 கைப்பிடி அளவு
  4. வேப்பம் புண்ணாக்கு – 1 கைப்பிடி அளவு

செம்பருத்தி செடியில் உள்ள மாவு பூச்சினை போக்க மைதா மாவு போதும்

செய்முறை:

முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு வெங்காய தோல் மற்றும் 2 கைப்பிடி அளவு பூண்டு தோலினை சேர்த்து நன்கு பொடி பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.

பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு கடலை புண்ணாக்கு மற்றும் 1 கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

பின்னர் இதனை நேரடியாக உங்கள் செடியின் வேர்களில் போடலாம் அப்படி இல்லையென்றால் ஒரு வாரம் இதனை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை வடிகட்டியும் ஊற்றலாம்.

இதன் மூலம் உங்களின் வெண்டைக்காய் செடி அதிக அளவு காய்களை காய்க்க தொடங்கும்.

நெல் வயலில் உள்ள களைகளை போக்க வேப்ப எண்ணெய் போதும்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம்