Vendakkai Kaika Enna Seiya Vendum
பொதுவாக நாம் சாப்பிடும் காய்கரிகளில் தான் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. அதனால் நமது வீடுகளில் கடைகளில் விற்கும் சத்துள்ள காய்கறிகளை பார்த்து பார்த்து வாங்கி வந்து நமக்கு சமைத்து கொடுக்கிறார்கள். அந்த வகையில் காய்களை நாம் பார்த்து வாங்கி வந்து சமைத்தாலும் கூட அவற்றை பராமரிப்பதற்காக இப்போது எல்லாம் பல வகையான ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. இத்தகைய நிலையினை எண்ணி பலர் இப்போது எல்லாம் வீட்டிலேயே காய்கறி செடிகளை வளர்த்து வருகிறார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் வீடுகளில் வளர்த்து வரும் காய்கறி செடிகளில் காய்கள் அந்த அளவிற்கு அதிகமாக காய்ப்பது இல்லை. அதனால் இன்று அதற்கான ஒரு டிப்ஸினை தான் பார்க்கப்போகிறோம். அதாவது காய்க்காத வெண்டைக்காய் செடியிலும் அதிகமாக காய்கள் காய்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
நெல் வயலில் எலி தொல்லை நீங்க வறுத்த கடலையை இப்படி செய்து வைத்தாலே போதும்
வெண்டைக்காய் செடி வளர்ப்பு முறை:
முதலில் நீங்கள் கடைகளில் இருந்து வாங்கி வரும் வெண்டைக்காய் விதையினை அப்படியே சாதாரணமாக விதைக்கக்கூடாது. ஏனென்றால் இதற்கு என்று ஒரு முறை உள்ளது.
அதனால் வெண்டைக்காய் விதையினை நடுவதற்கு முன்பாக அதற்கான ஒரு குழியினை பறித்து அதில் தழைகள், மணல் மற்றும் சாம்பல் சிறிதளவு சேர்த்து அதன் பிறகு மேலே வெண்டைக்காய் செடிக்கான விதைகளை நடவு செய்ய வேண்டும்.
இந்த முறையினை நீங்கள் மாடித்தோட்டம் மற்றும் வீட்டு தோட்டங்களில் செய்யலாம்.
பூக்கள் பூக்க:
வெண்டைக்காய் செடியில் இலைகள் வைக்க ஆரம்பித்த உடன் மாட்டு கோமியத்தை தண்ணீரில் கலந்து அந்த செடியின் மீது தெளித்து விடுங்கள். இவ்வாறு கோமியத்தை தெளிப்பதன் மூலம் செடிக்கு நைட்ரஜன் சத்து கிடைத்து பூக்கள் நிறைய பூக்கும்.
வெண்டைக்காய் காய்க்க:
- வாழைப்பழத்தோல்- 1/4 கிலோ
- பப்பாளி தோல்- 1/4 கிலோ
- வெல்லம்- 1/4 கிலோ
முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு தோல்களையும் நன்றாக கனிந்து இருப்பதாக பார்த்து எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த இரண்டு தோலினையும் மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.
பின்பு அரைத்து வைத்துள்ள பொருளுடன் 1/4 கிலோ வெல்லம் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இப்போது தயார் செய்து வைத்துள்ள கலவையில் 10 மடங்கு தண்ணீருடன் கலந்து அதனை செடிகளுக்கு ஊற்ற வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் வெண்டைக்காய் செடிக்கு தேவையான பொட்டாசியம் மற்றும் நைட்ரஜன் சத்து கிடைத்து காய்க்காத வெண்டைக்காய் செடியிலும் காய்கள் பை பைய்யாக காய்க்கும்.
பூக்கவே பூக்காத செம்பருத்தி செடியிலும் கூடை கூடையாக பூக்கள் பூக்க வேர்க்கடலை மட்டும் போதும்
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |