சேலத்தில் இந்திய இராணுவத்திர்க்கான ஆள்சேர்க்கை நடைபெறுகிறது.

indian-army

இந்திய இராணுவ வேலைவாய்ப்பு பேரணி 2018, (ARO) கோயம்புத்தூர் – சேலத்தில் ஆள்சேர்க்கை நடைபெறுகிறது, சோல்ஜர் (படைவீரன்) பணிகள், கடைசி தேதி: 06.08.2018, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், @ www.joinindianarmy.nic.in

இந்திய இராணுவ வேலைவாய்ப்பு பேரணி 2018: இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் (ARO) – கோயம்புத்தூர். சோல்ஜர் டெக்னாலஜி, சோல்ஜர் டெக்னிக்கல் (AVN & AMN பரிசோதகர்), சோல்ஜர் நர்சிங் அசிஸ்டன்ட், சோல்ஜர் ஜெனரல் டூட்டி, சோல்ஜர் கிளார்க் / ஸ்டோர் கீப்பர் பதவிக்கு புதிய இராணுவ ஆட்சேர்ப்பு பேரணிக்கு அறிக்கையை அறிவித்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் சோல்ஜர் பதவிக்கு இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு பேரணிக்கு திருமணமாகாத விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, தேனி, மதுரை மற்றும் சேலம் ஆகிய மாவட்டத்தில் உள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள். இந்த இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தகுதியை சரிபார்த்து கடைசி தேதி அல்லது அதற்க்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மகாத்மா காந்தி ஸ்டேடியத்தில், சேலம், 12.30 AM (மிட்நைட்)மணிக்குள்  பரிந்துரைக்கப்பட்ட தேதிக்கு வர வேண்டும். எனவே விரைவில் விண்ணப்பிக்கவும். இங்கு  கல்வித் தகுதி மற்றும் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய இராணுவ வேலைவாய்ப்பு பேரணி அறிவிப்பு 2018:

நிறுவனம்: இந்திய இராணுவம்
வேலை வகை: மத்திய அரசு
பணிகள்:சோல்ஜர் டெக்னாலஜி, சோல்ஜர் டெக்னிக்கல் (AVN & AMN பரிசோதகர்), சோல்ஜர் நர்சிங் அசிஸ்டன்ட், சோல்ஜர் ஜெனரல் டூட்டி, சோல்ஜர் கிளார்க் / ஸ்டோர் கீப்பர் பணிகள்.
பேரணி நடைபெறும் இடங்கள்: மகாத்மா காந்தி ஸ்டேடியத்தில், சேலம், காலை 12.30 AM (மிட்நைட்) மணிக்குள்
பேரணி நடைபெறும் நாள்: 22.08.2018 to 02.09.2018

தமிழ்நாட்டிர்கான இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கான தகுதி விவரங்கள்:

கல்வி தகுதி:

 • 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி, இடைநிலை பயிற்சி, மூன்று வருடம் டிப்ளோமா பொறியியல், பி.எஸ்.சி, அங்கீகரிக்கப்பட்ட குழு அல்லது பல்கலைகழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கல்வி தகுதியை சரி பார்க்கவும்.

வயது வரம்பு:

பணிகள் குறைந்தபட்சம்அதிகபட்சம்
சோல்ஜர் ஜெனரல் டூட்டி17 ஆண்டுகள் 06 மாதங்கள்21 ஆண்டுகள்
சோல்ஜர் டெக்னாலஜி, சோல்ஜர் டெக்னிக்கல் (AVN & AMN பரிசோதகர்), சோல்ஜர் நர்சிங் அசிஸ்டன்ட், சோல்ஜர் கிளார்க் / ஸ்டோர் கீப்பர் பணிகள்.23 ஆண்டுகள்

தேர்வு முறை:

 • உடல் உடற்திரன் டெஸ்டு (PFT)
 • மருத்துவ சோதனை.
 • உடல் அளவுகோல் சோதனை.
 • பொது நுழைவு தேர்வு.

விண்ணப்ப முறை:

 • ஆன்லைன் முறை.

இந்திய இராணுவ வேலைவாய்ப்பு பேரணிக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 • www.joinindianarmy.nic.in  அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லுங்கள்.
 • அவற்றில் இந்திய இராணுவம் வேலைவாய்ப்பு பேரணி விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 • விளம்பரத்தின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 • தகுதி வாயிந்த விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 • கடைசி தேதி அல்லது அதற்கு முன் ஆன்லைன் மூலம் உங்கள் விண்ணப்பத்தை விண்ணப்பிக்க வேண்டும்.
 • இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு print out எடுத்துக் கொள்ளவும்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 08.07.2018
கடைசி தேதி06.08.2018

 

SHARE