TNPL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2018-19:
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம்(TNPL) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது.
அறிவிப்பின்படி TNPL – யூனிட்-ll பணிகளான பாதுகாப்பு அதிகாரி(அதிகாரி கிரேடு), பாதுகாப்பு அதிகாரி (உதவி மேலாளர் கிரேடு) மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரி (துணை மேலாளர் கிரேடு) ஆகிய பணிகளுக்கு மொத்தம் 02 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தில், தேவையான பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ், மதிப்பெண்கள் சான்றிதழ் மற்றும் அனுபவசான்றிதழ் ஆகியவற்றை இணைத்திருக்க வேண்டும்.
TNPL-யில் புதிய வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு பற்றி தெரிஞ்சிக்க இந்த Link ஐ கிளிக் பண்ணுங்க..!
விண்ணப்ப படிவத்தில் இந்த ஆவணங்கள் இல்லை என்றால் கண்டிப்பாக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
அறிவிக்கப்பட்ட தேதி முதல் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அலுவலக முகவரிக்கு விண்ணப்ப படிவம் அனுப்பவேண்டும்.
விண்ணப்பதாரர்கள் பொறியியல் அல்லது தொழில்நுட்ப கல்வியில், எந்தவொரு பிரிவிலும் அங்கீகாரம் பெற்ற பட்டம் அல்லது இயற்பியல் அல்லது வேதியியல் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
தமிழ்நாடு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப கல்வி மற்றும் டிப்ளோமா பட்டம்(Industrial Safety) பெற்றிருக்கவேண்டும்.
கடைசி தேதியான 22.08.2018 அன்றுக்குள் விண்ணப்ப படிவத்தை கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.
மேலும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விவரம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கல்வி தகுதி, வயதுவரம்பு மற்றும் காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதநிறுவனத்தின் வேலைவாய்ப்பு விவரம்:
நிறுவனம் | தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL) |
வேலைவாய்ப்பின் வகை | மாநில அரசு |
பணிகள் | TNPL யூனிட்-ll பணிகளுக்கு பாதுகாப்பு அதிகாரி(அதிகாரி கிரேடு), பாதுகாப்பு அதிகாரி (உதவி மேலாளர் கிரேடு) மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரி (துணை மேலாளர் கிரேடு) |
மொத்தக்காலியிடங்கள் | 02 |
பணியிடங்கள் | திருச்சி |
TNPL-யில் புதிய வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு பற்றி தெரிஞ்சிக்க இந்த Link ஐ கிளிக் பண்ணுங்க..!
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் வேலைவாய்ப்பு காலியிடங்களின் தகுதி விவரங்கள்:
கல்வி தகுதி:
- BE, ME, BA, டிப்ளோமா பட்டதாரிகள் TNPL காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதிவாய்ந்தவர்கள்.
- அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்.
வயது வரம்பு:
- பாதுகாப்பு அதிகாரி(அதிகாரி கிரேடு) விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 28 ஆண்டுகளும்.
- பாதுகாப்பு அதிகாரி (உதவி மேலாளர் கிரேடு) விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 29 ஆண்டுகளும்.
- தலைமை பாதுகாப்பு அதிகாரி (துணை மேலாளர் கிரேடு) விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 34 ஆண்டுகளும்.
- அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரிபார்க்கவும்.
TNPL யூனிட்-ll ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கான சம்பள விவரம்:
பணி | சம்பளம் |
பாதுகாப்பு அதிகாரி(அதிகாரி கிரேடு) | Rs. 19200 – 480 – 24000/- |
பாதுகாப்பு அதிகாரி (உதவி மேலாளர் கிரேடு) | Rs. 23400 – 590 – 29300/- |
தலைமை பாதுகாப்பு அதிகாரி (துணை மேலாளர் கிரேடு) | Rs. 28200 – 710 – 35300/- |
முன்னனுபவம்:
- பாதுகாப்பு அதிகாரி(அதிகாரி கிரேடு) விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது 8 ஆண்டுகளும்.
- பாதுகாப்பு அதிகாரி (உதவி மேலாளர் கிரேடு) விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது 10 ஆண்டுகளும்.
- தலைமை பாதுகாப்பு அதிகாரி (துணை மேலாளர் கிரேடு விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது 14 ஆண்டுகளும்.
TNPL-யில் புதிய வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு பற்றி தெரிஞ்சிக்க இந்த Link ஐ கிளிக் பண்ணுங்க..!
தேர்வு முறை:
ஆஃப்லைன் முறை – அஞ்சல்.
அஞ்சல் முகவரி:
CHIEF GENERAL MANAGER-HR,
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED,
KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMIL NADU.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 08.08.2018 |
கடைசி தேதி | 22.08.2018 |
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இவற்றில் காண்போம்:-
- www.tnpl.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் ஆள்சேர்ப்பு காலியிடங்களின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- விளம்பர அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் TNPL ஆள்சேர்ப்பு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரர்களின் விண்ணப்பபடிவத்தில் மேல் கூறிய அனைத்து சான்றிதழ்களையும் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும்.
- அறிவிக்கப்பட்ட தேதி முதல் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அஞ்சல் முகவரிக்கு விண்ணப்ப படிவம் அனுப்பவேண்டும்.
- கடைசி தேதிக்கு பிறகு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.
TNPL-யில் புதிய வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு பற்றி தெரிஞ்சிக்க இந்த Link ஐ கிளிக் பண்ணுங்க..!
மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.