விண்ணப்பித்து விட்டிற்களா ! TNPSC Group 2 Exam

tnpsc group 2

TNPSC Group 2 Exam Notification 2018: 2018 ஆம் ஆண்டிற்கான குரூப் 2 (நேர்காணல் பணிக்கு) / ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ்-II தேர்வுக்கான தேர்வை தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (TNPSC) தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அறிவிப்பு படி, மொத்தம் 1199 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09 ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகிறது.

TNPSC Group 2 தேர்வுக்கான ஆன்லைன் பதிவு 10.08.2018 முதல் தொடங்குகிறது மற்றும் இணைப்பு 09.09.2018 அன்று வரை செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு பொது சேவை ஆணைக்குழுவின் தேர்வு முறை. (I) ஆரம்பநிலை தேர்வு, (ii) முதன்மை தேர்வு மற்றும் (iii) நேர்காணல் என்று மூன்று முறையில் நடைப்பெறும்.

சென்னை, சிதம்பரம், கோயம்புத்தூர், காஞ்சிபுரம், காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, உதகமண்டலம் மற்றும் வேலூர் மையங்களில் தேர்வு நடைபெறும்.

அனைத்து விண்ணப்பதாரர்களும் கடைசி தேதி வரை ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் முறையில் தங்கள் பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டும்.

TNPSC Group-II காலியிடங்கள் விண்ணப்பிக்க விரும்புபவர் / அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும். இங்கு சிலபஸ், அட்மிட் கார்ட்ஸ்,  மாடல் கேள்விப்பதிவுகள், சம்பள விவரங்கள், எதிர்வரும் தேர்வு   முதலியன விவரங்களை சேகரிக்க முடியும்.

TNPSC Group-II வேலைவாய்ப்பின் விவரங்கள்:

நிறுவனம்: தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (TNPSC)
வேலைவாய்ப்பின் வகை: மாநில அரசு
மொத்த காலியிடங்கள்: 1199
பணியிடங்கள்:தமிழ்நாடு முழுவதும்

 

TNPSC குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி விவரங்கள்:

கல்வி தகுதி:

 • அனைத்து பட்டதாரிகளும் இந்த TNPSC குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதிவாய்ந்தவர்கள்.
 • தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் லோயர் / ஹெயர் கிரேடு மூலம் தட்டச்சு  தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கல்வித் தகுதி பற்றிய கூடுதல் விவரங்களைச் சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

 • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரிபார்க்கவும்.

தேர்வு முறை:

 • ஆரம்ப தேர்வு.
 • முதன்மை தேர்வு.
 • நேர்காணல்.

விண்ணப்ப முறை:

 • ஆன்லைன் முறை மூலம்.

விண்ணப்ப கட்டணம்:

 • Registration Fee Rs.150/-
 • முதன்மை தேர்வுக்கு ரூ.150/-
 • ஆரம்ப தேர்வுக்கு ரூ.100/-
 • SC / ST / PWD விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் இல்லை.
 • ஏற்கனவே ஒரு முறை பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள், மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

 • Online Mode: By Net Banking / Credit card / Debit card.
 • Offline Mode: By State Bank of India (SBI)/Indian Bank /Post office

TNPSC குரூப் 2 தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று காண்போம்:

 • tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 • அவற்றில் TNPSC குரூப் 2 தேர்வுக்கான விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 • பின்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும்.
 • இந்த TNPSC குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நீங்கள் தகுதியுடையவர்களா என்று சரிபார்க்கவும்.
 • தகுதிவாந்த விண்ணப்பதாரர்கள் இந்த TNPSC குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
 • விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கவும்.
 • கடைசி தேதிவரை விண்ணப்படிவத்தை பதிவு செய்யலாம்.
 • இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்க்காக விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 10.08.2018
கடைசி தேதி 09.09.2018 till 11.59 PM
ஆரம்ப தேர்வு நடைபெறும் தேதி 11.11.2018 FN [10.00 A.M. to 1.00 P.M.]

 

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE