10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 30 ஆயிரம் சம்பளத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு..!

Advertisement

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2024 – Cuddalore Jobs 2024

கடலூர் மாவட்ட நலவாழ்வு வேலைவாய்ப்பு 2024: கடலூர் மாவட்ட தேசிய நல்வாழ்வு குழுமத்தில் பணிபுரிய தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடலூர் மாவட்ட நலவாழ்வு மையத்தில் கொடுப்பட்டுள்ள பணிகள் முற்றிலும் ஒப்பந்த முறையில் தற்காலிகமாக பணியமர்த்தப்படவுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது மொத்தம் 22 காலியிடங்களை கொண்டுள்ளது. ஆகையால், விருப்பம் மற்றும் தகுயுள்ளவர்கள் இப்பணிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கடலூர் மாவட்ட நலவாழ்வு வேலைவாய்ப்பிற்கு 22-01-2024 முதல் 08-02-2024 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் DEO, Nurse, Lab Technician உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளது. கடலூர் மாவட்ட நலவாழ்வு வேலைவாய்ப்பு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுங்கள்.

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு விவரம்:

நிறுவனம் கடலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம்
பணிகள்  DEO, Nurse, Lab Technician உள்ளிட்ட பல்வேறு பணிகள் 
மொத்த காலியிடங்கள் 22
பணியிடம்  கடலூர், தமிழ்நாடு 
சம்பளம்  ரூ.8,500 முதல் ரூ.30,000 வரை
விண்ணப்பிக்கும் முறை  தபால் மூலம்
விண்ணப்பம் தொடங்கும் நாள்   22/01/2024
விண்ணப்பிக்க கடைசி நாள்   08/02/2024
அதிகாரப்பூர்வ இணையதளம் cuddalore.nic.in

கல்வி தகுதி:

  • கடலூர் மாவட்ட நலவாழ்வு வேலைவாய்ப்பிற்கு 10th, 8th, Any Degree, B.Sc, BBA, BCA, BDS, BE/B.Tech, Diploma, DMLT, M.Sc, மற்றும் MA, Nursing படித்தவர்கள் தகுதியானவர்கள்.
  • மேலும் கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Offcial Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • இந்த பணிக்கு விண்ணப்பிக்க உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2024 காலியிடங்கள் விவரம்:

வ. எண்  பணிகள்  காலியிடங்கள் எண்ணிக்கை 
1 நிரல் மேலாளர் 1
2 தரவு உதவியாளர் 1
3 மருத்துவ உளவியலாளர் 1
4 உளவியலாளர் 1
5 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் 1
6 திட்டம்/நிர்வாக உதவியாளர் 1
7 பிசியோதெரபி டாக்டர் 1
8 நடுத்தர நிலை சுகாதார வழங்குநர் 3
9 சுத்தம் செய்பவர் 1
10 ஸ்டாஃப் நர்ஸ் 1
11 ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் 1
12 சுகாதார ஆய்வாளர் 2
13 நகர்ப்புற சுகாதார செவிலியர் 1
14 பல்நோக்கு சுகாதார பணியாளர் 1
15 ரேடியோகிராஃபி டெக்னீஷியன் 3
16 உளவியலாளர் 1
17 பல் அறுவை சிகிச்சை நிபுணர் 1
18 மொத்தம் காலியிடங்கள் 22

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2024 சம்பள விவரம்:

வ. எண்  பணிகள்  சம்பளம் 
1 நிரல் மேலாளர்  ரூ.30,000
2 தரவு உதவியாளர்  ரூ.15,000
3 மருத்துவ உளவியலாளர்  ரூ.18,000
4 உளவியலாளர்  ரூ.18,000
5 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்  ரூ.13,500
6 திட்டம்/நிர்வாக உதவியாளர்  ரூ.12,000
7 பிசியோதெரபி டாக்டர்  ரூ.13,000
8 நடுத்தர நிலை சுகாதார வழங்குநர்  ரூ.18,000
9 சுத்தம் செய்பவர் ரூ.8,500
10 ஸ்டாஃப் நர்ஸ்  ரூ.18,000
11 ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்  ரூ.13,000
12 சுகாதார ஆய்வாளர்  ரூ.14,000
13 நகர்ப்புற சுகாதார செவிலியர்  ரூ.14,000
14 பல்நோக்கு சுகாதார பணியாளர்  ரூ.8,500
15 ரேடியோகிராஃபி டெக்னீஷியன்  ரூ.13,300
16 உளவியலாளர்  ரூ.23,000
17 பல் அறுவை சிகிச்சை நிபுணர்  ரூ.26,000

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.

விண்ணப்ப முறை:

  • அஞ்சல் (Offline) மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் இல்லை.

அஞ்சல் முகவரி:

  • அஞ்சல் முகவரியை கீழே கொடுக்கப்பட்டுள்ள Offcial Notification-ஐ பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.

கடலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு 2024 விண்ணப்பிக்கும் முறை:

  1. cuddalore.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அப்பக்கத்தில் Recruitment என்பதை கிளிக் செய்து Temporary Basis Appointment by District Health Society பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கிளிக் செய்து தகுதி மற்றும் பிற விவரங்களை பற்றி தெரிந்துக்கொள்ளவும்.
  3.  பிறகு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும்.
Official Notification & APPLICATION FORM Click Here 
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் கடலூர் மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (cuddalore jobs 2024) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in Tamil 2024


Advertisement