ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2020..!

TNRD Dindigul Recruitment 2020

திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2020

திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலகில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு 2020 அறிவிப்புப்படி பணிபார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணிகளை நிரப்ப மொத்தம் 26 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிமிருந்து விண்ணப்பங்களை ஆஃப்லைன் மூலம் வரவேற்கிறது. எனவே தகுதிபெற்ற விண்ணப்பதாரர்கள் 27.11.2020 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2020 அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் நேரடி நியமனம் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில்  தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலகில் பணியமர்த்தப்படுவார்கள்.

TNRD Dindigul Recruitment 2020

நிறுவனம்ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை – திண்டுக்கல் மாவட்டம்
வேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020
பணிகள்பணிபார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர்
மொத்த காலியிடம்26
சம்பளம்ரூ.35,400 – ரூ.1,12,400
பணியிடம்திண்டுக்கல்
விண்ணப்பிக்க கடைசி நாள்27.11.2020
அதிகாரப்பூர்வ இணையதளம்dindigul.nic.in

கல்வி தகுதி:-

 • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து Diploma in Civil Engineering படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:-

 • 01.07.2020 அன்றின்படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:-

 • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:-

 • அஞ்சல் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:-

மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), 154, மாவட்ட ஆட்சியரக வளர்ச்சிப்பிரிவு, மாவட்ட ஆட்சியரகம் – 624 005 திண்டுக்கல்

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. dindigul.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.
 2. பின் NOTICES என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
 3. பிறகு Recruitment of Overseer, Junior Drafting Officer in Rural Development Department, Dindigul என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பபடிவத்தை டவுன்லோட் செய்யவும்.
 6. பின் விண்ணப்பபடிவத்தை சரியாக பூர்த்தி செய்து, தேவையான சான்றுதழ்களை இணைத்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை 27.11.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
NOTIFICATION & APPLICATION FORMDOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!OUTDATED VACANCY

தமிழக அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2020..! Dindigul jobs 2020..!

Dindigul jobs 2020:- திண்டுக்கல் மாவட்ட குஜிலியம்பாறை மற்றும் நிலக்கோட்டை ஆகிய வட்டங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிகளை நிரப்ப தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த கிராம உதவியாளர் பணிகளை நிரப்ப மொத்தம் 17 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கபடுக்கிறது. எனவே குஜிலியம்பாறை வட்டாரத்தில் உள்ள தகுதிவாய்ந்தவர்கள்  02.11.2020 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆஃப்லைன் மூலம் சமர்ப்பிக்கவும். அதேபோல் நிலக்கோட்டை வட்டாரத்தில் உள்ள தகுதிவாய்ந்தவர்கள் 22.10.2020 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆஃப்லைன் மூலம் சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த திண்டுக்கல் மாவட்ட கிராம உதவியாளர் பணிகளை நிரப்பிட விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நேர்காணல் தேர்வில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் குஜிலியம்பாறை மற்றும் நிலக்கோட்டை ஆகிய வட்டங்களில் உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு 2020:-

நிறுவனம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு
Advertisement Numberசெ.வெ.எண்:-17/2020 & செ.வெ.எண்:-20/2020
பணி Village Assistant
மொத்த காலியிடங்கள் 17
பணியிடம் திண்டுக்கல் மாவட்ட குஜிலியம்பாறை மற்றும் நிலக்கோட்டை ஆகிய வட்டங்களில்
விண்ணப்பிக்க கடைசி தேதி 
குஜிலியம்பாறை 02.11.2020
நிலக்கோட்டை 22.10.2020
Official websitedindigul.nic.in

காலியிடங்கள் விவரம்:-

சம்மந்தப்பட்ட வட்டாரம்காலியிடங்கள் எண்ணிக்கை 
குஜிலியம்பாறை09
நிலக்கோட்டை08
மொத்த காலியிடங்கள்17

கல்வி தகுதி:-

 • இந்த கிராம உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, பதிவு நாள் முதல் இன்று தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
 • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:-

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் வயது 35 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:-

 • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:-

 • தகுதியான நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, ஜாதி ஆகிய விபரங்கள் கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை கடைசி  தேதிக்குள் சம்மந்தப்பட்ட வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. https://dindigul.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.
 2. அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள அதாவது “Kujiliamparai-Village Assistant Job & Nilakkottai-Village Assistant Job”, பணிகளுக்கான அறிவிப்பு விளம்பரங்களை தேர்வு செய்யவும்.
 3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கவும்.
OFFICIAL NOTIFICATIONNOTICE 1 | NOTICE 2

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் திண்டுக்கல் மாவட்டம் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (Dindigul job vacancy) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020