IOCL வேலைவாய்ப்பு 2018 / இந்தியா எண்ணெய் கூட்டுத்தாபனம் லிமிடெட் / ஜுனியர் ஆப்ரேட்டர் (அனுவபம் அல்லாத நிர்வாக அலுவலர்) / மொத்த காலியிடங்கள் 50 / கடைசி தேதி 07.07.2018 / ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் @ iocl.com
IOCL ஆட்சேர்ப்பு 2018: ஐ.ஓ.சி.எல் அமைப்பில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், ஜார்கண்ட், மணிப்பூர், மேகாலயா, ஒடிசா, திரிபுரா மற்றும் மேற்க்கு வங்காளம். போன்ற பல்வேறு இடங்களுக்கு ஜுனியர் ஆப்ரேட்டர் பதவிக்கு வேலைவாய்ப்பு பிரிவில் அனுபவம் அல்லாத நிர்வாக பணிகளுக்கு அறிவிப்பை அறிவித்துள்ளது. IOCL வேலைவாய்ப்பு குறிப்பாக இந்த பதவிக்கு 50 காலியிடங்களை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு ஜுன் மாதம் 16-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும். அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு பெற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பெறலாம்.
ஆர்வமுள்ள மற்றும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. நிறுவனத்தின் தேவைகேற்ப காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கப்படலாம். விண்ணப்பதாரர்கள் ஒரு விண்ணப்பத்தை மட்டும் பாதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்ப்பட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்தால் அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். BE/MBA/MCA/CA /LLB அல்லது தொழில்முறை தகுதி பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். ஆட்சேர்ப்பு பற்றி மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சென்று விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். இங்கு தகுதி, காலியிடங்ளின் விவரங்கள், விண்ணப்பிப்பது எப்படி முதலியன விவரங்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.
IOCL ஆட்சேர்ப்பு காலியிடங்களின் விவரங்கள்:
நிறுவனம்: | இந்தியா எண்ணெய் கூட்டுத்தாபனம் லிமிடெட் (IOCL) |
வேலை வகை: | மத்திய அரசு |
பணிகள்: | அனுபவம் அல்லாத நிர்வாக அலுவலர் (ஜுனியர் ஆப்ரேட்டர்) |
மொத்த காலியிடங்கள்: | 50 |
பணியிடங்கள்: | அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், ஜார்கண்ட், மணிப்பூர், மேகாலயா, ஒடிசா, திரிபுரா மற்றும் மேற்க்கு வங்காளம். |
IOCL ஆட்சேர்ப்பு மொத்த காலியிடங்களின் விவரங்கள்:
பணிகள் | பணியிடங்கள் | காலியிடங்கள் |
அனுபவம் அல்லாத நிர்வாக அலுவலர் (ஜுனியர் ஆப்ரேட்டர்) | அந்தமான் ரூ நிக்கோபதர் தீவுகள் | 02 |
அருணாச்சல பிரதேசம் | 02 | |
அசாம் | 15 | |
பீகார் | 20 | |
ஜாகண்ட் | 05 | |
மணிப்பூர் | 01 | |
மேகாலயா | 01 | |
ஓடிசா | 06 | |
திரிபுரா | 03 | |
மேற்க்கு வங்காளம் | 13 | |
மொத்த காலியிடங்கள் | 50 |
IOCL ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கான தகுதி விவரங்கள்:
கல்வி விவரங்கள்:
- 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கல்வி தகுதியை சரிவார்க்கவும்.
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 ஆண்டுகளும், அதிகபட்சம் 26 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வயது தளர்வை சரிபார்க்கவும்.
தேர்வு முறை:
- எழுத்து தேர்வு.
- திறமை வாய்ந்த சோதனை.
விண்ணப்ப முறை:
- ஆன்லைனில்.
விண்ணப்ப கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.150/-
கட்டணம் செலுத்தும் முறை:
- ஆன்லைனில் கட்டணம் நுழைவாயில் / NEFT வழியாக.
IOCL ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது:
- @ iocl.com அதிகாரப்பூர்வ வலைதளத்திர்க்கு செல்லுங்கள்.
- அவற்றில் IOCL ஆட்சேர்ப்பு காலியிடங்களின் விளம்பரத்தை தேர்வு செய்யுங்கள்.
- விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- பின்பு உங்கள் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
- இறுதியாக உங்கள் பயன்பாட்டிர்க்கு விண்ணப்ப பதிவை print out எடுத்துக் கொள்ளவும்.
முக்கிய தேதிகள்:
ஆரம்பத் தேதி | 16.06.2018 |
கடைசி தேதி | 07.07.2018 |